பொது செய்தி

தமிழ்நாடு

முதல், 2ம் தவணை தடுப்பூசி 12.41 லட்சம் பேருக்கு அளிப்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
நாமக்கல்: 'மாவட்டம் முழுவதும், முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி, 12 லட்சத்து, 40 ஆயிரத்து, 711 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது' என, கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 13 லட்சத்து, 84 ஆயிரத்து, 300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, முதல் தவணை தடுப்பூசி (66.49 சதவீதம்)

நாமக்கல்: 'மாவட்டம் முழுவதும், முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி, 12 லட்சத்து, 40 ஆயிரத்து, 711 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது' என, கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 13 லட்சத்து, 84 ஆயிரத்து, 300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, முதல் தவணை தடுப்பூசி (66.49 சதவீதம்) ஒன்பது லட்சத்து, 20 ஆயிரத்து, 409 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி (23.14 சதவீதம்), மூன்று லட்சத்து, 20 ஆயிரத்து, 302 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. அதில், கர்ப்பிணிகளுக்கு, முதல் தவணை, 8,066 பேருக்கும், இரண்டாம் தவணை, 437 பேருக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கு, முதல் தவணை, 9,818 பேருக்கும், இரண்டாம் தவணை, 538 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஊனமுற்றோர்களுக்கு, முதல் தவணை, 8,323, இரண்டாம் தவணை, 764; 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு, முதல் தவணை, ஒரு லட்சத்து, 23 ஆயிரத்து, 340, இரண்டாம் தவணை, 49 ஆயிரத்து 59 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்றானது முற்றிலும் ஒழியவில்லை. கல்லூரி மாணவ, மாணவியர், தங்கள் பெற்றோர், உறவினர்கள், நண்பர்களுக்கு தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துரைத்து, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X