சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 14, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்கை கழுவுதல், கிராமப்புற பெண்கள்கை கழுவுதல் நன்மை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்.15ல் உலக கை கழுவுதல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சாப்பிடும் முன்பு கை கழுவுதல் உடல் நலனுக்கு நல்லது. கிருமிகள் உடலுக்குள் செல்வதை தடுக்கிறது. கை கழுவுதல் கொரோனா பரவலை தடுப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. * கல்வி, சொத்து, தொழில், விவசாயம் போன்ற துறைகளில்

அறிவியல் ஆயிரம்
கை கழுவுதல், கிராமப்புற பெண்கள்
கை கழுவுதல் நன்மை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்.15ல் உலக கை கழுவுதல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சாப்பிடும் முன்பு கை கழுவுதல் உடல் நலனுக்கு நல்லது. கிருமிகள் உடலுக்குள் செல்வதை தடுக்கிறது. கை கழுவுதல் கொரோனா பரவலை தடுப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

* கல்வி, சொத்து, தொழில், விவசாயம் போன்ற துறைகளில் கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவ வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக். 15ல் உலக கிராமப்புற பெண்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 25 சதவீதம் பேர் கிராமப்புற பெண்கள்.

தகவல் சுரங்கம்
இளைஞர் எழுச்சி தினம்

இளைஞர்களின் கனவு நாயகனாக திகழ்ந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த தினமான அக்.15, தமிழகத்தில் இளைஞர் எழுச்சி தினமாக கடை பிடிக்கப்படுகிறது. உடலால் மறைந்தாலும் இவரது கண்டுபிடிப்புகள், அறிவியல் தொழில்நுட்பத்துக்கு ஆற்றிய பங்கு, மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்ததன் மூலம் அனைவரது மனதிலும் வாழ்கிறார். 1931 அக்.15ல் ராமேஸ்வரத்தில் பிறந்தார். ராக்கெட், ஏவுகணை, அணு ஆயுத விஞ்ஞானி, நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்தார். 2015ல் உயிர் பிரியும் வரை இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X