பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: நவ., 22ல் கூட்ட திட்டம்

Updated : அக் 14, 2021 | Added : அக் 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரை அடுத்த மாதம் 22ல் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குளிர் கால கூட்டத்தொடர்பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 19ல் கூடியது. புதிய வேளாண் சட்டம், 'பெகாசஸ்' போன் ஒட்டு கேட்பு விவகாரம் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன.இதனால்

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரை அடுத்த மாதம் 22ல் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



latest tamil news




குளிர் கால கூட்டத்தொடர்

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 19ல் கூடியது. புதிய வேளாண் சட்டம், 'பெகாசஸ்' போன் ஒட்டு கேட்பு விவகாரம் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன.இதனால் கூட்டத் தொடரை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மழைக்கால கூட்டத் தொடர் திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே ஆக., 11ல் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் குளிர்கால கூட்டத் தொடரை அடுத்த மாதம் 22ல் துவக்கி, டிச., 23 வரை ஒரு மாதம் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாகவே நவ., 15ல் கூட்டம் துவங்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil news





முடக்க திட்டம்



கொரோனா தடுப்பு நெறிமுறைகள் முன்பு போல தீவிரமாக இல்லாத காரணத்தால் உறுப்பினர்கள் பரிசோதனை சான்றிதழ் இன்றி சபைக்கு வர அனுமதிக்கப்படுவர் என தெரிகிறது.மழைக்கால கூட்டத் தொடரின் போது அமளியால் சபை நடவடிக்கையை முடக்கியதை போல, குளிர்கால கூட்டத் தொடரையும் முடக்க திரிணமுல் காங்., மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-அக்-202111:24:29 IST Report Abuse
அப்புசாமி இவிங்க ரொம்ப நல்லவங்க மாதிரி எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கணும்னு கோரிக்கை வெப்பாங்க. எதிர்க்கட்சிகள் வெறுப்பாயி பார்லிமெண்ட்டில் அமளி பண்ணுவாங்க. உடனே வெங்கையா நாயுடு வேதனை தெரிவிப்பார். எதிக்கட்சிகளால் கூட்டம் தடைபட்டதால நாடுக்கு 150 கோடி நஷ்டம்னு ஆளுங்கட்சி சொல்லும். இதுக்கு கூட்டமே நடத்த வாணாம். பணத்த வேற எதுக்காவெது செலவு பண்ணுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X