உ.பி., சட்டமன்ற தேர்தல்: காங்.,கை கழற்றி விடும் சமஜ்வாதி

Updated : அக் 14, 2021 | Added : அக் 14, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
அடுத்தாண்டு 2022-ல் பஞ்சாப், மனிப்பூர், கோவா, உத்தரகண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் உத்தரபிரதேசம் மாநில தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் எதிர்கட்சிகளான காங்கிரஸ், சமஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் இப்போதே தயாராகிக்

அடுத்தாண்டு 2022-ல் பஞ்சாப், மனிப்பூர், கோவா, உத்தரகண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் உத்தரபிரதேசம் மாநில தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் எதிர்கட்சிகளான காங்கிரஸ், சமஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் இப்போதே தயாராகிக் கொண்டிருக்கின்றன.latest tamil news
உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற வேண்டுமென வலியுறுத்தி முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், விஜய் ரத யாத்திரை என்ற பெயரில் மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.

அகிலேஷ் யாதவ் கூறியதாவது: கடந்த காலங்களில் சமஜ்வாதி கட்சி பெரிய தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் அவ்வளவு திருப்தியாக இல்லை. எனவே சிறிய மற்றும் மாநிலக் கட்சிகளை ஒன்றுதிரட்டி கூட்டணி ஏற்படுத்தவே முயற்சிப்பதாக தெரிவித்தார்.இதனால் அங்கு காங்கிரஸ் கட்சியுடன் சமஜ்வாதி கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்றே உறுதியாக தெரியவருகிறது.


latest tamil news
2017 தேர்தலில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி வைத்தன. ஆனால் இந்த கூட்டணியால் பாஜகவுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை. மாறாக 312 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று அதிர்ச்சி அளித்தது. அப்போது சமாஜ்வாதி கட்சிக்கு 47 சீட்களும், பகுஜன் சமாஜுக்கு 19 சீட்களும், காங்கிரஸுக்கு 7 சீட்கள் மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-அக்-202117:31:53 IST Report Abuse
ராஜா மண்டை மேல் கொட்டு வச்சி உக்கார வச்சிருவார் நம்ம யோகி.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
15-அக்-202108:43:56 IST Report Abuse
duruvasar இனிமே வயசுக்கு வந்தா என்ன, வரேலானா என்ன ? ஸ்டாலின் அய்யாவுக்கு நல்ல வாய் ராசி. ஸ்கெட்ச் போட்டு தூக்கிட்டாரு.
Rate this:
Cancel
Karur Kumar -  ( Posted via: Dinamalar Android App )
15-அக்-202108:28:29 IST Report Abuse
Karur Kumar PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X