எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

புத்துயிர் பெறுகிறதா புலிகள் இயக்கம்?

Updated : அக் 15, 2021 | Added : அக் 14, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
தமிழகத்தில் விடுதலை புலிகள் ஊடுருவல் உள்ளதையும், அவர்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதையும், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பான எச்சரிக்கைகள், தமிழக அரசுக்கு தொடர்ந்து அனுப்பி வைக்கப்படுகின்றன.சென்னை, வளசரவாக்கத்தில் தங்கி, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த, புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சபேசன் என்பவரை,
புத்துயிர் பெறுகிறதா புலிகள் இயக்கம்?

தமிழகத்தில் விடுதலை புலிகள் ஊடுருவல் உள்ளதையும், அவர்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதையும், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பான எச்சரிக்கைகள், தமிழக அரசுக்கு தொடர்ந்து அனுப்பி வைக்கப்படுகின்றன.

சென்னை, வளசரவாக்கத்தில் தங்கி, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த, புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சபேசன் என்பவரை, சமீபத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.


சோதனைஇது தொடர்பாக, தீவிரவாத குழுக்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள, முன்னாள் ராணுவ மேஜர் மதன்குமார் கூறியதாவது:கடந்த மார்ச் மாதம் கச்சத் தீவு அருகே, சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்த, இலங்கை மீன்பிடி கப்பலில், இந்திய கடலோர காவல் படை சோதனை நடத்தியது. அதில்1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'ஹெராயின்' போதைப் பொருள், ஐந்து ஏ.கே., 47 ரக துப்பாக்கிகள், துப்பாக்கி தோட்டாக்கள் பிடிபட்டன.

இந்த கடத்தலில் சர்வதேச தொடர்புகள் இருப்பதோடு, பின்னணியில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலரும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, என்.ஐ.ஏ., தீவிர விசாரணையில் இறங்கியது. அதில் தான், போதைப் பொருள் கடத்தலுக்கு தலைவனாக இருந்து செயல்பட்ட சபேசன் குறித்த விபரங்கள் வெளியாகின.புலிகள் இயக்கம் இலங்கையில் வீழ்த்தப்பட்ட பின், புலிகள் பலரும் பல நாடுகளுக்கும் தப்பி ஓடினர். அதில் ஒருவர் தான் சபேசன்.

புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவில் முக்கிய நபராக பணியாற்றியவர். அவர், சென்னைக்கு தப்பி வந்து, வளசரவாக்கத்தில் வீடு எடுத்து தங்கியதும், சர்வதேச போதைப் பொருள் ஆசாமிகளோடு தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது. சபேசன் வீட்டை என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், சேட்டிலைட் போன் சிக்கியது. இவ்வகை போனை, அரசு அனுமதியுடன், அரசு தொடர்பான சிலர் மட்டுமே பயன்படுத்த முடியும். தனியார் பயன்படுத்த அனுமதி இல்லை. அத்துடன் சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்துவதற்கான தகவல்கள் அடங்கிய ஆவணங்களும் சபேசன் வீட்டில் கைப்பற்றப்பட்டன.


அக்கறை இல்லை

இந்த கடத்தல் வாயிலாக கிடைத்த பல ஆயிரம் கோடி ரூபாயை, இலங்கையில் இருக்கும் விடுதலை புலிகளுக்கு அனுப்பியதும் தெரிய வந்தது. இலங்கையில் அழிக்கப்பட்ட புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் பணியை சபேசன் செய்து வந்துள்ளார். சமீப காலமாக, புலிகள் இயக்கத்தில், இலங்கையில் இருக்கும் ஆர்வமுள்ள இளைஞர்கள் சேர்க்கப் பட்டு உள்ளனர். அதன் ஒருங்கிணைப்பு பணியையும் சபேசன் தான் செய்துள்ளார்.

லண்டனில் இருக்கும் ஒரு இலங்கை தமிழ் சங்கம், 'இந்தியாவுக்கு புலிகள் பற்றியோ, இலங்கை தமிழர்கள் பற்றியோ துளியும் அக்கறை இல்லை. பண உதவி'அதனால், இனிமேல் புலிகள் இயக்கம் தலையெடுக்க வேண்டும் என்றால், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் சீனா மற்றும் அதன் நட்பு நாடான பாகிஸ்தானோடு கைகோர்த்து செயல்பட வேண்டும்' என, சபேசன் உள்ளிட்ட சில புலிகள் இயக்க நபர்களிடம் கூறியுள்ளது. க்ஷ

இதை அடுத்தே, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், குறிப்பாக திரிகோணமலையில் இருக்கும் இலங்கை தமிழ் இளைஞர்கள் பலர், புலிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். பணத் தட்டுப்பாடு இன்றி, புலிகள் இயக்கம் அங்கே வேகமாக வளர்க்கப் பட்டு வருகிறது. இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள், வெளிநாடுகளில் செல்வச் செழிப்புடன் உள்ளனர். அவர்களும் பண உதவி அளித்து வருகின்றனர்.

சென்னை, திருவான்மியூர் பகுதியில் இலங்கை தமிழர்கள் பலர் கூட்டம் நடத்தியுள்ளனர். இலங்கையில் புலிகள் இயக்கம் மீண்டும் உயிர் பெற, தங்களால் இயன்றதை செய்யலாம் என, அந்த கூட்டத்தில் முடிவெடுத்துள்ளனர். இந்த தகவல், தமிழக உளவு பிரிவு போலீசாருக்கு கிடைத்துள்ளது.இதையடுத்து, தமிழகத்தில் எங்கெல்லாம் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளனர் என்பதைக் கண்டறியும் பணியில், தமிழக உளவு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


இலங்கைக்கு புதுசங்கடம்

அதே நேரத்தில், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களை நோக்கி சீனர்கள், குறிப்பாக சீன இளைஞர்கள் வர துவங்கி உள்ளனர். அவர்கள், தமிழர்களுக்கு சொந்தமான இடங்களை வாடகைக்கு எடுத்து தங்குவதோடு, அவர்களோடு நட்பாக பழகி வருகின்றனர். தமிழர்களுக்கு தேவையான பண உதவியும் அளித்து வருகின்றனர்.அத்துடன், புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியில் சீனர்களும் இறங்கி உள்ளனர்.

பல விஷயங்களில் சீனாவை நம்பி இலங்கை அரசு பயணிக்கும் நிலையில், புலிகள் இயக்கத்துக்கு உயிரூட்ட சீனா செய்து வரும் முயற்சி, இலங்கை அரசுக்கு புது சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.


தீவிர கவனம்

இதற்கிடையில், இலங்கையின் கிழக்கு பகுதியில் மற்றொரு விஷயமும் வேகமாக நடக்கிறது. பாகிஸ்தான், துருக்கி போன்ற நாடுகளில் இருக்கும் மத அடிப்படைவாதிகள், இலங்கையின் கல்வெட்டி, முத்துார் போன்ற பகுதிகளுக்கு அதிக எண்ணிக்கையில் வந்துள்ளனர். அங்கிருந்தபடியே, இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது தான் அவர்கள் திட்டம். அவர்களும், இலங்கையில் புலிகள் இயக்கம் உயிரூட்டம் பெற, உதவி செய்ய துவங்கி உள்ளனர்.

என்.ஐ.ஏ., மத்திய உளவு அமைப்புகள், தமிழக 'க்யூ' பிரிவு போலீசார், கடலோர காவல் படை, கடற்படை, வருவாய் புலனாய்வுத் துறை உள்ளிட்ட பாதுகாப்பு படைகள் இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மதன்குமார் கூறினார்.
- நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
19-அக்-202115:32:16 IST Report Abuse
திரு.திருராம் இது இந்தியா இலங்கையை விட்டுப்பிடிக்கும் ஆட்டமோ என்று தோன்றுகிறது, இலங்கைக்கு நடுமண்டையில் நச்சென்று உரைக்கும்படி சிக்கல் சிக்கும்வரை விட்டு பிறகு பிடித்து நிறுத்த இந்தியா முயல்கிறதோ என தோன்றுகிறது,
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
15-அக்-202122:09:34 IST Report Abuse
Duruvesan Yesappavin seedar stalin, vaigai புயல் வைகோ வாழ்க
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
15-அக்-202119:00:12 IST Report Abuse
DVRR தவறு கண்டேன் சுட்டேன் என்ற சட்டம் ஒன்று தான் உலகை ஒரு நல்வழிப்பாதையில் கொண்டு செல்லும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X