அனைத்து நாளிலும் வழிபாட்டுத்தலங்கள்...திறப்பு!: இரவு11 மணி வரை கடைகளுக்கு அனுமதி

Updated : அக் 15, 2021 | Added : அக் 14, 2021 | கருத்துகள் (66) | |
Advertisement
சென்னை:வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களை திறந்து, பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கும் வகையில், ஊரடங்கில் மேலும் பல தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இரவு, 11:00 மணி வரை கடைகள் செயல்படவும், மழலையர், நர்சரி பள்ளிகளை திறக்கவும் பச்சைக்கொடி காட்டியுள்ளது. அதேநேரத்தில், அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு மட்டும் தடை நீடிக்கிறது.கொரோனா தொற்று
 அனைத்து நாள்கள், வழிபாட்டு ,தலங்கள்,திறப்பு!

சென்னை:வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களை திறந்து, பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கும் வகையில், ஊரடங்கில் மேலும் பல தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இரவு, 11:00 மணி வரை கடைகள் செயல்படவும், மழலையர், நர்சரி பள்ளிகளை திறக்கவும் பச்சைக்கொடி காட்டியுள்ளது. அதேநேரத்தில், அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு மட்டும் தடை நீடிக்கிறது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும், வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.பண்டிகை காலம் என்பதால், கோவில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களையும் எல்லா நாட்களும் திறந்து, பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.

வழக்கு விசாரணை யின் போது, 'நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி, இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார்' என்று அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து, 'கோவில்களை திறப்பது குறித்து, மாநில அரசு முடிவெடுக்க லாம்' என நீதிமன்றம்உத்தரவிட்டது.


ஆய்வு கூட்டம்

இந்நிலையில், கொரோனா தடுப்புக்கான தொடர் நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய் தொற்றின் நிலவரம் குறித்தும், தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின், 13ம் தேதி நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தலாம் என்பது உட்பட, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


ளர்வுகள் விவரம்:

* ஏற்கனவே, செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகை கடைகள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் இரவு, 11:00 மணி வரை இயங்கலாம்

* அனைத்து வழிபாட்டு தலங்களிலும், வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும், பொதுமக்கள் வழிபாடு நடத்தலாம்

* அனைத்து டியூஷன் சென்டர்கள், அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் இன்று முதல் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது


நவம்பர் 1 முதல் அனுமதிக்கப்பட்டவை

* மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்களை நடத்தலாம்

* தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகள், உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நடக்கலாம்

* மழலையர் விளையாட்டு பள்ளிகள், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம். காப்பாளர், சமையலர் உள்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்

* ஞாயிற்றுகிழமைகளில் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லலாம்.

* திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில், 100 பேர் பங்கு பெறலாம்; இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேர் பங்கேற்கலாம்.


நீடிக்கும் கட்டுப்பாடுகள்

* திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கு நடைமுறையில் உள்ள தடை தொடரும்

* கடைகளின் நுழைவாயிலில், வாடிக்கையாளர்கள் கைகளை சுத்தம் செய்யும் வகையில், 'சானிடைசர்' கட்டாயம் வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலையை உரிய கருவியால் பரிசோதிக்க வேண்டும்

* கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக் கவசம் அணிவதை, அதன் நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்* அனைத்து கடைகளும் குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்படுவதுடன், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது

* கடைகளின் நுழைவு வாயிலில், பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும், மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்

* பண்டிகை காலத்தில் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில், அதிகப்படியான பொதுமக்கள் கூடுவதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம், சென்னை மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் போலீசார் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தளர்வுகளையும், கட்டுப்பாடுகளையும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு ஆன்மிக அமைப்புக்களும் முதல்வரின் அறிவிப்பை வரவேற்றுள்ளன.


கவனமாக இருங்கள் முதல்வர் வேண்டுகோள்!

முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள வேண்டுகோள்: பொதுமக்கள் அனைவரும் பண்டிகை காலங்களில் கவனமாக இருக்க வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

மாவட்ட நிர்வாகங்கள், சென்னை மாநகராட்சி, சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று, பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அரசின் அனைத்து முயற்சிகளுக்கும், மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைத்து வணிக நிறுவனங்களும், கட்டுப்பாட்டு விதிமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
AMCHI - chennai,இந்தியா
15-அக்-202120:53:46 IST Report Abuse
AMCHI நாத்திகனுக்கு ஓட்டு போட்டு அப்புறம் அவனையே கோவில் தொறக்க சொல்லி கெஞ்சுற மானம் கெட்ட பொழப்பு... இதுல கோவில் தொராந்தாச் சுன்னு கொண்டாட்டம் வேற
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
15-அக்-202122:02:00 IST Report Abuse
Dhurveshகடவுள் கடவுள் என கத்துகிற எவனும் ஒரு கோவிலைகூட கட்டியது இல்லை. மற்றவர்கள் கட்டிய கோவிலில் உட்கார்ந்து கொண்டு உள்ளே வரக்கூடாது தீட்டு என்பான். இரண்டு சதவீதம் பேர் பிழைப்பதற்காக 80 % பேருக்கு மத வெறியை தூண்டினால் அதற்க்கு பெயர் RSS - பிஜேபி...
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
15-அக்-202119:37:12 IST Report Abuse
Sivagiri வெள்ளைக் கொடி ஏந்தி வெற்றி கொண்ட வேந்தே வாழ்க வாழ்க . . . மற்ற மதத்தவர் யாரும் வேண்டுகோள் வைக்கவில்லையா ? அந்த மாதிரி எந்த நியூஸும் வர மாட்டேங்குதே . . . பெந்தெகோஸ்ட் கும்பல்-கூச்சல் (ஜெபம் ? . . ) போட அனுமதி உண்டா ? . .
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
15-அக்-202119:34:26 IST Report Abuse
Duruvesan மூர்கன் மொத்தம் ஹிந்துக்கள் பெயரில் திரிவது ஏன்? 🤔
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X