அரசியல் செய்தி

தமிழ்நாடு

'எதிர்க்கட்சியே இல்லை என்ற இறுமாப்பு எனக்கு கிடையாது'

Updated : அக் 16, 2021 | Added : அக் 14, 2021 | கருத்துகள் (30+ 36)
Share
Advertisement
சென்னை:'எதிர்க்கட்சியே இல்லாத ஆளுங்கட்சி என்று, இறுமாப்பு கொள்ளும் மனப்பான்மை எனக்கு கிடையாது' என்று தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதம்:ஊரக உள்ளாட்சி தேர்தலில் 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில், 138 இடங்களில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுஉள்ளனர். இதன் வாயிலாக ஒன்பது மாவட்ட ஊராட்சி தலைவர் பொறுப்பையும், தி.மு.க., அணியே
எதிர்க்கட்சியே, இல்லை,  இறுமாப்பு, எனக்கு, கிடையாது'

சென்னை:'எதிர்க்கட்சியே இல்லாத ஆளுங்கட்சி என்று, இறுமாப்பு கொள்ளும் மனப்பான்மை எனக்கு கிடையாது' என்று தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கடிதம்:ஊரக உள்ளாட்சி தேர்தலில் 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில், 138 இடங்களில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுஉள்ளனர். இதன் வாயிலாக ஒன்பது மாவட்ட ஊராட்சி தலைவர் பொறுப்பையும், தி.மு.க., அணியே பெறுகின்ற வாய்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர்.

அதுபோலவே, 1,381 ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கான இடங்களிலும், 1,000 இடங்களுக்கும் கூடுதலாக தி.மு.க., அணி வெற்றி பெற்றுஉள்ளது. இதன் வாயிலாக 74 ஊராட்சி ஒன்றிய தலைவர் பொறுப்புகளில், 73 பொறுப்புகள் தி.மு.க., வசமாகியுள்ளன. இடைத்தேர்தல் நடைபெற்ற பகுதிகளிலும், தி.மு.க., வெற்றியை குவித்துள்ளது.எதிர்க்கட்சியே இல்லாத ஆளுங்கட்சி என்று, ஒரு போதும் இறுமாப்பு கொள்ளும் மனப்பான்மை, உங்களில் ஒருவனான எனக்கு கிடையாது.

மக்கள் தான் நமக்கு எஜமானர்கள்; நாம் அவர்களுக்கு தொண்டு செய்ய வேண்டியவர்கள் என்பதை, எப்பொழுதும் நெஞ்சில் கொண்டு செயலாற்ற வாழ்த்துகிறேன்.விரைவில் நடைபெற உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் களத்திலும், உதயசூரியன் உதித்திட வேண்டும்.

மக்கள் நம் பக்கம்; நாம் மக்களின் பக்கம். அதற்கேற்ப நம் செயல்பாடுகள், மக்கள் நலன் காக்கும் வகையில் தொடர்ந்திடும். இனி உள்ளாட்சி எங்கும் நல்லாட்சி ஒளிரும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (30+ 36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
15-அக்-202120:55:42 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam பழைய நினைப்பில், வெளிநடப்பு செய்ய வேண்டாம்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
15-அக்-202119:58:09 IST Report Abuse
sankaseshan ரொம்ப ரொம்ப நல்லவரு தற்பெருமை இல்லாத சொக்கத்தங்கம்
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
15-அக்-202118:20:08 IST Report Abuse
DVRR நான் எதிர்க்கட்சியில் (அதாவது இந்து எதிர்க்கட்சி) இருந்து தான் ஆட்சி செய்கின்றேன் என்று எவ்வளவு அழகாக சொல்கின்றது இந்த மடியல் அரசு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X