பொது செய்தி

தமிழ்நாடு

மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் தனித்தனியாக பிரிக்கப்படுமா?

Updated : அக் 16, 2021 | Added : அக் 14, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை:மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், 1.59 லட்சம் கோடி ரூபாய் கடனை குறைத்து, நிதி நெருக்கடியை சரிசெய்ய, தனித்தனி நிறுவனங்களாக பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.மத்திய மின் சட்டத்தின் கீழ், தமிழக மின் வாரியம் 2010ல், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் என, இரு நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது. மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு
மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் தனித்தனியாக பிரிக்கப்படுமா?

சென்னை:மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், 1.59 லட்சம் கோடி ரூபாய் கடனை குறைத்து, நிதி நெருக்கடியை சரிசெய்ய, தனித்தனி நிறுவனங்களாக பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மத்திய மின் சட்டத்தின் கீழ், தமிழக மின் வாரியம் 2010ல், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் என, இரு நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது. மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சொந்தமாக மின் நிலையங்கள் உள்ளன. அந்நிறுவனமே, மாநிலம் முழுதும் மின் வினியோக பணிகளை மேற்கொள்கிறது.


செலவு அதிகம்

மின் தொடரமைப்பு கழகம், மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்லும் பணியை செய்கிறது.இரு நிறுவனங்களாக பிரிக்கப்பட்டாலும், இதுவரை, சொத்து விபரம், ஊழியர்கள் பிரிக்கப்படாமலே உள்ளனர். இதனால், மின் தொடரமைப்பு நிறுவனம் ஈட்டும் வருவாய், மின் உற்பத்தி கழக பணிகளுக்கு செலவு செய்யப்படுகிறது.

அப்படி இருந்தும், பகிர்மான கழகம் தொடர் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. கட்டண வசூல், அரசு மானியம் போன்றவற்றால், மின் உற்பத்தி கழகத்திற்கு வருவாய் கிடைக்கிறது. வரவை விட செலவு அதிகம் இருப்பதால் கடன் வாங்கப்படுகிறது.தற்போதைய நிலவரப்படி, மின் உற்பத்தி கழகத்தின் கடன் 1.59 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. எனவே, அதன் கடன் சுமையை குறைத்து, நிதி நெருக்கடியை சரிசெய்ய, அதை தனித்தனி நிறுவனங்களாக பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்து விற்கின்றன. உற்பத்தி செலவுக்கு ஏற்ப மின்சாரம் விற்பதால் வருவாய் ஈட்டுகின்றன. அதேபோல் தான், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை பிரித்து, தனித்தனி நிர்வாகமாக செயல்பட வைக்க வேண்டும். அப்படி செய்தால், மின் உற்பத்தி கழகம் மின்சாரத்தை பகிர்மான கழகத்திற்கு விற்கும்.


16 ஆயிரம் கோடி ரூபாய்

மின் பகிர்மான கழகமும், மின்சார விற்பனைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கும். நிதி விவகாரங்களிலும் அதிக கவனம் செலுத்தப்படும் என்பதால், அவசியமின்றி செலவு செய்ய முடியாது. தனித்தனி நிறுவனங்களாக பிரிப்பது என்பது, தனியாருக்கு வழங்குவது என்று அர்த்தம் இல்லை.

ஒவ்வொரு நிறுவனத்தையும், தனி ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் கீழ் செயல்பட வைக்கலாம். மின் உற்பத்தி கழகம் லாபம் ஈட்டும் வகையில் செயல்பட வாய்ப்பிருந்தும், பகிர்மான கழகத்துடன் இணைந்து, ஒரே நிறுவனமாக செயல்படுவதால் தான் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுகிறது. வட்டி மட்டும், 16 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படுகிறது.

பல மாநிலங்களில், மின் பகிர்மான கழகமே, இரண்டு, மூன்று நிறுவனங்களாக செயல்படுகின்றன. இதனால், அவற்றுக்குள் போட்டி ஏற்பட்டு, மின் வினியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.ஆனால், தமிழகத்தில் மின் பகிர்மான கழகத்தை பல நிறுவனங்களாக பிரிக்கும் பணியை மேற்கொள்ளவில்லை என்றாலும், தற்போதைக்கு, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிதி நெருக்கடியை சரிசெய்ய, தனித்தனி நிறுவனங்களாக பிரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Gaborone,போஸ்ட்வானா
15-அக்-202120:02:14 IST Report Abuse
Rajan In both the establihments, privatise all service related departments to leading companies like TCS, Info etc. (as in the case of Passport Dept.) for better results without extra money involvement & to bring in more transparency in documentation.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
15-அக்-202109:07:21 IST Report Abuse
duruvasar மின்சார வாரியம் ஒரு கற்பக விருட்சம் . இரண்டா பிரிச்சா இரட்டை வருமானம். 2024 தேர்தலுக்கு ஒன்ணு 2026 தேர்தலுக்கு ஒன்னணுன்னு பிரிக்கறதும் ஈஸி.
Rate this:
ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா
15-அக்-202114:19:51 IST Report Abuse
ரிஷிகேஷ் நம்பீசன் ஏன்டா நுனிப்புல் already TANGEDCO TANTRANCO என்று electricity ACT 2013 இந் படி பிரித்தே விட்டார்கள் இப்போ தான் நீ GANDHI செதுட்டாரா என்று கூவுற ,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X