பொது செய்தி

தமிழ்நாடு

பி.ஏ.பி., வாய்க்காலில் தொடர் மரணங்கள்

Added : அக் 14, 2021
Share
Advertisement
பொங்கலுார்:பி.ஏ.பி., வாய்க்காலில் தொடர் மரணங்கள் அரங்கேறுகின்றன. தற்கொலையா... கொலையா என்று முடிவெடுக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.திருமூர்த்தி மலையில் இருந்து பி.ஏ.பி., பிரதான வாய்க்கால், 124 கிலோ மீட்டர் பயணிக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளத்திற்கு கிளை வாய்க்கால்கள் செல்கின்றன.திறந்தவெளி 'பார்'பி.ஏ.பி., வாய்க்கால் அருகில் பெரும்பாலும் விவசாய

பொங்கலுார்:பி.ஏ.பி., வாய்க்காலில் தொடர் மரணங்கள் அரங்கேறுகின்றன. தற்கொலையா... கொலையா என்று முடிவெடுக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.திருமூர்த்தி மலையில் இருந்து பி.ஏ.பி., பிரதான வாய்க்கால், 124 கிலோ மீட்டர் பயணிக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளத்திற்கு கிளை வாய்க்கால்கள் செல்கின்றன.
திறந்தவெளி 'பார்'பி.ஏ.பி., வாய்க்கால் அருகில் பெரும்பாலும் விவசாய நிலங்கள் உள்ளது. விவசாயிகள் எந்நேரமும் வாய்க்காலுக்கு வருவதில்லை. அதிகாரிகள் எப்போதாவது அவ்வழியாக ரோந்து செல்வது உண்டு. கேள்வி கேட்பார் யாரும் இல்லாததால் போதை ஆசாமிகள் பலர் பி.ஏ.பி., வாய்க்காலை திறந்தவெளி பாராக பயன்படுத்துகின்றனர். பி.ஏ.பி., முழுவதும் ஆளரவமற்ற பகுதியாக உள்ளது.
இதை சமூக விரோதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.கொலையா... தற்கொலையா!பல்வேறு கொலைகள் பி.ஏ.பி., வாய்க்காலில் அரங்கேற்றப்படுகின்றன. கோவையைச் சேர்ந்த ஒரு சிறுவன், ஒரு சிறுமி என இருவரை கடந்த, 2010ல் இருவர் கடத்தி பி.ஏ.பி., வாய்க்காலில் வீசி கொலை செய்தனர். இந்தக் கொலை வழக்கு கோவையை உலுக்கியது.இதே போல பி.ஏ.பி.,யில் வாரந்தோறும் ஒன்றிரண்டு சடலங்களாவது மீட்கப்படுவது வாடிக்கை.
இதில் தற்கொலை செய்தவர், வாய்க்காலில் துணி துவைக்க சென்றவர், நீச்சல் தெரியாதவர் என பலரும் அடங்குவர். வாய்க்காலில் தள்ளி கொலை செய்தாலும் காயம் இல்லாவிட்டால், அது தற்கொலையாகவே கருதப்படும்.தடயம் கிடைப்பதில் சிக்கல்நேற்று முன்தினம் பொங்கலுார் கவுண்டம்பாளையம் அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் தலையில் வெட்டுக் காயங்களுடன் மிதந்து வந்த, 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதத்தை கைப்பற்றி அவிநாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொலை நடந்தது ஓரிடம் சடலத்தை மீட்டது வேறொரு இடம் என்பதால் தடயங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. கொலையானவரே அடையாளம் காணப்படாத நிலையில், கொலையாளிகளை கண்டறிவது சவால் நிறைந்ததாக உள்ளது.சமூக விரோதிகளுக்கு சாதகம்முன்பு பி.ஏ.பி., வாய்க்கால் வழியாகச் செல்லும் ரோட்டில் பொதுப்பணித்துறையினரைத் தவிர யாரும் உள்ளே நுழைந்து விட முடியாதபடி பூட்டுப்போட்டு பாதுகாத்தனர்.
இப்போது அதுபோன்ற எந்த நடைமுறையும் இல்லை. இது சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.போலீசார், பொதுப்பணித்துறையினர், விவசாயிகள் என முத்தரப்பு கூட்டு அமைப்பு ஏற்படுத்தி சமூக விரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X