தமிழ்நாடு

பின்னலாடை துறையில் புதிய தொழில்முனைவோர் வெற்றித் திருநாள்!: வர்த்தக வாய்ப்பு பிரகாசம்; முத்திரை பதிக்க தீவிரம்

Updated : அக் 15, 2021 | Added : அக் 14, 2021
Share
Advertisement
திருப்பூர்:கொரோனா பாதிப்புகள் விலகியதையடுத்து, திருப்பூர் பின்னலாடைத் துறை மீண்டும் முத்திரை பதிப்பதற்கு ஆயத்தமாகியுள்ளது; வெற்றித்திருநாளான விஜய தசமியான இன்று, புதிய தொழில் முனைவோர் பலர், இத்துறையில் தடம் பதிக்கின்றனர்.இன்று, விஜயதசமி கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரன் என்கிற அரக்கனுடன் ஒன்பது நாட்கள் போரிட்டு, அன்னை, வெற்றிவாகை சூடிய நாள். குழந்தைகளுக்கு கல்வியை
பின்னலாடை துறையில் புதிய தொழில்முனைவோர் வெற்றித் திருநாள்!: வர்த்தக வாய்ப்பு பிரகாசம்; முத்திரை பதிக்க தீவிரம்

திருப்பூர்:கொரோனா பாதிப்புகள் விலகியதையடுத்து, திருப்பூர் பின்னலாடைத் துறை மீண்டும் முத்திரை பதிப்பதற்கு ஆயத்தமாகியுள்ளது; வெற்றித்திருநாளான விஜய தசமியான இன்று, புதிய தொழில் முனைவோர் பலர், இத்துறையில் தடம் பதிக்கின்றனர்.இன்று, விஜயதசமி கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரன் என்கிற அரக்கனுடன் ஒன்பது நாட்கள் போரிட்டு, அன்னை, வெற்றிவாகை சூடிய நாள். குழந்தைகளுக்கு கல்வியை துவக்குவது, புதிய தொழில் துவங்குவது என இன்று துவங்கும் நற்செயல்கள் அனைத்தும் வெற்றி தரும் என்பது ஐதீகம்.
திருப்பூர் என்றாலே, பின்னலாடை உற்பத்திதான் பிரதானம். சாதாரண பனியன் தொழிலாளராக பணிபுரிந்த பலரும், இரவு - பகல் பாராத கடின உழைப்பால், இன்று மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும், உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களாகவும், ஜாப்ஒர்க் துறையினராக உயர்ந்துள்ளனர்.விஜயதசமி நாளான இன்று, பின்னலாடை உற்பத்தி துறையில், புதிய தொழில்முனைவோர் பலர் அடியெடுத்துவைக்கின்றனர்.சில நிறுவனங்கள், தங்கள் புதிய ஆடை உற்பத்தி பிரிவு கிளைகளை ஏற்படுத்தியுள்ளன. சுய முதலீடு, வங்கி கடன்கள் பெற்றும், அதிநவீன மெஷின்களை நிறுவியும், சிறப்பு பூஜைகளுடன், ஆடை உற்பத்தியை துவக்குகின்றனர்.
கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகியுள்ளன. உலகளாவிய மக்கள், ஆயத்த ஆடை ரகங்கள் வாங்க ஆர்வம்காட்டுகின்றனர். இதையடுத்து, திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, அமெரிக்கா, ஐரோப்பா உட்பட வெளிநாடுகளில் இருந்து ஆடை தயாரிப்புக்கு ஆர்டர் வருகை அதிகரித்துள்ளது.உள்நாட்டுக்கான ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு, வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவு ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இதனால், திருப்பூர் பகுதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, காஜாபட்டன், செக்கிங், அயர்னிங் என எல்லாவகை ஜாப்ஒர்க் நிறுவனங்களும் பிஸியாகியுள்ளன.பின்னலாடை துறையில் புதிதாக தடம்பதிக்கும் தொழில்முனைவோருக்கு, பிரகாசமான எதிர்காலம் தெரிகிறது.சிறந்த மற்றும் நிலையான தரத்தில் ஆடை தயாரிப்பது; ஜாப் ஒர்க் பணிகளை நேர்த்தியாக மேற்கொள்வது. குறித்த காலத்துக்குள் உற்பத்தி பணிகளை பூர்த்தி செய்வது. வர்த்தகர்களின் எதிர்பார்ப்பை அறிந்து, புதுமையான டிசைன்களில் ஆடை தயாரிப்பது இவையெல்லாம், பின்னலாடை துறையினரை சாதனை படிக்கட்டுக்களில் பயணிக்கச் செய்யும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X