பொது செய்தி

தமிழ்நாடு

பேரிடர் மீட்பு பணி ஒத்திகை

Added : அக் 14, 2021
Share
Advertisement
திருப்பூர்:சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி, சிறப்பு கருவிகள், கலெக்டர் அலுவலகத்தில், கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து, தீயணைப்புத்துறை அதிகாரிகள் முன்னிலையில், தீயணைப்பு வீரர்கள், தாலுகா அலுவலகம் தோறும் சென்று, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தினர். நேற்றுமுன்தினம் மாலை, கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் வினீத்

திருப்பூர்:சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி, சிறப்பு கருவிகள், கலெக்டர் அலுவலகத்தில், கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து, தீயணைப்புத்துறை அதிகாரிகள் முன்னிலையில், தீயணைப்பு வீரர்கள், தாலுகா அலுவலகம் தோறும் சென்று, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தினர். நேற்றுமுன்தினம் மாலை, கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் வினீத் முன்னிலையில், ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.'ரோப் ரைடர்' மூலம் மீட்பு பணியை மேற்கொள்வது; ' பெட்ரோல் செயின் ஷா' மூலம் மரங்களை வெட்டி அகற்றுவது, ''ஏர்லிப்ட் பேக்' ஊர்தி வாயிலாக துாக்கி காப்பாற்றுவது.போன்ற மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.திருப்பூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள், மாவட்ட அலுவலர் காங்கேய பூபதி, உதவி மாவட்ட அலுவலர் ஜெயசங்கர், திருப்பூர் வடக்கு நிலைய அலுவலர் பாஸ்கரன், திருப்பூர் தெற்கு சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X