பொது செய்தி

தமிழ்நாடு

தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு புதிய இடம்: ஒப்புதல் கிடைக்குமா?

Added : அக் 14, 2021
Share
Advertisement
பல்லடம்:ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக, பல்லடம் அருகே, தனியார் இடத்தில் வாகன ஆய்வு பணி நடந்து வருகிறது.திருப்பூர் வீரபாண்டி பிரிவு அருகே, திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் அமைந்துள்ளது. தினசரி ஏராளமான வாகனங்கள் பதிவு, உரிமம், தரச்சான்று புதுப்பிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வருகின்றன. ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால், பல்லடம்
 தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு புதிய இடம்: ஒப்புதல் கிடைக்குமா?

பல்லடம்:ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக, பல்லடம் அருகே, தனியார் இடத்தில் வாகன ஆய்வு பணி நடந்து வருகிறது.திருப்பூர் வீரபாண்டி பிரிவு அருகே, திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் அமைந்துள்ளது. தினசரி ஏராளமான வாகனங்கள் பதிவு, உரிமம், தரச்சான்று புதுப்பிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வருகின்றன. ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால், பல்லடம் அடுத்த நொச்சிபாளையம் செல்லும் ரோட்டில் உள்ள தனியார் இடத்தில் வாகன ஆய்வு மற்றும் விண்ணப்பதாரர்கள் எட்டு போட்டு காட்டுதல் போன்றவை நடக்கின்றன.வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'திருப்பூர் சுண்டமேடு பகுதியில், இடம் தேர்வு செய்யப்பட்டு அரசு ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உரிய பதில் இன்னும் கிடைக்கவில்லை. அதன் காரணமாக, தற்காலிகமாக இந்த இடத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றனர்.நொச்சிபாளையம் ரோட்டில், ஆர்.டி.ஓ., ஆய்வு பணிகள் நடந்து வரும் இடம் மிகவும் குறுகலானது. மேலும், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இடத்தை கண்டுபிடித்து வரவேண்டிய நிலை உள்ளது. தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு விரைந்து இடம் தேர்வு செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X