தபால் துறையில் வேலை விண்ணப்பம் வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தபால் துறையில் வேலை விண்ணப்பம் வரவேற்பு

Added : அக் 14, 2021
Share
திருப்பூர்:தமிழ்நாடு தபால்துறை வட்டத்தில், காலியாக உள்ள, 500 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.போஸ்ட்மேன் பிரவில் சென்னை மண்டலத்தில் - 234, மத்திய மண்டலத்தில் - 58, தெற்கு - 117, மேற்கு மண்டலத்தில் - 79, மெயில் கார்டு பிரிவில் - 13 என, 501 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். ஜன., 2021 அடிப்படையில்

திருப்பூர்:தமிழ்நாடு தபால்துறை வட்டத்தில், காலியாக உள்ள, 500 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.போஸ்ட்மேன் பிரவில் சென்னை மண்டலத்தில் - 234, மத்திய மண்டலத்தில் - 58, தெற்கு - 117, மேற்கு மண்டலத்தில் - 79, மெயில் கார்டு பிரிவில் - 13 என, 501 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். ஜன., 2021 அடிப்படையில் பொதுப்பிரிவினர் - 50 வயதிற்குள், ஓ.பி.சி., - 56, எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவில் -55 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்.எழுத்துதேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய இரு வகையில் தேர்வுகள் நடக்கப்படும். சென்னை, கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர், இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கோட்ட அலுவலகங்களுக்கு, வரும், 20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு, https://tamilnadupost.nic.in இணையதளத்தை பார்க்கலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X