சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

பகல் கனவு!

Added : அக் 14, 2021
Share
Advertisement
'ஊகூம்; இவரது வியூகத்தை பார்த்தால் அடுத்த சட்டசபை தேர்தலிலும் நம்மால் ஆட்சியை பிடிக்க முடியாது போலிருக்கிறது...' என, ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை நினைத்துப் புலம்புகின்றனர், தெலுங்கு தேசம் கட்சியினர். கடந்த தேர்தலில் பறி கொடுத்த ஆட்சியை அடுத்த தேர்தலில் பிடித்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார், தெலுங்கு தேசம்
 பகல் கனவு!

'ஊகூம்; இவரது வியூகத்தை பார்த்தால் அடுத்த சட்டசபை தேர்தலிலும் நம்மால் ஆட்சியை பிடிக்க முடியாது போலிருக்கிறது...' என, ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை நினைத்துப் புலம்புகின்றனர், தெலுங்கு தேசம் கட்சியினர்.

கடந்த தேர்தலில் பறி கொடுத்த ஆட்சியை அடுத்த தேர்தலில் பிடித்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு. இதற்காக மாநிலம் முழுதும் பல போராட்டங்களை நடத்தி வருகிறார். ஆனால், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அவ்வளவு எளிதாக ஆட்சியை விட்டுக் கொடுக்க மாட்டார் போலிருக்கிறது. ஏற்கனவே ஆந்திர அரசின் கஜானா காலியாக இருக்கிறது.

வருமானம் வரும் பகுதிகள் எல்லாம் தெலுங்கானாவுக்கு போய் விட்டபின், நிதி பற்றாக்குறையால் அரசு தள்ளாடுகிறது. ஜெகன்மோகன் ரெட்டி இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதாக தெரியவில்லை.

நலத் திட்டங்கள் என்ற பெயரில், பல கோடி ரூபாய் கடன் வாங்கி வாரி இறைக்கிறார்.தன் தந்தையும், முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டி பெயரில் ஏழைகளுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தை துவக்கி உள்ளார். இதில் 60 லட்சம் பேர் பயனடைகின்றனர். இதற்காக, மாதத்துக்கு 1,400 கோடி ரூபாய் செலவாகிறது.

அடுத்த தேர்தலை மனதில் வைத்து தான் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி. தெலுங்கு தேசம் கட்சியினரோ, 'மாதம் மாதம் ரொக்கமாக வாங்கி பழக்கப்பட்ட மக்கள், ஜெகனுக்குத் தான் ஓட்டுப் போடுவர். நாம் ஆட்சியில் அமர்வது பகல் கனவு தான்' என, முணுமுணுக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X