சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : அக் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: உள்ளாட்சி தேர்தல் தான் ஜனநாயகத்தின் அடித்தளம். அங்கு வலிமையான ஜனநாயகம் அமைந்தால் கிராமங்களும், மக்களும் முன்னேறுவர். அதனால் தான், பா.ம.க., தனித்து போட்டியிட்டது. தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை பா.ம.க., கைப்பற்றியதன் வாயிலாக, மூன்றாவது பெரிய அரசியல் சக்தி என்பதை, மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. 'டவுட்' தனபாலு: உங்கள் கட்சி
 'டவுட்' தனபாலு

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: உள்ளாட்சி தேர்தல் தான் ஜனநாயகத்தின் அடித்தளம். அங்கு வலிமையான ஜனநாயகம் அமைந்தால் கிராமங்களும், மக்களும் முன்னேறுவர். அதனால் தான், பா.ம.க., தனித்து போட்டியிட்டது. தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை பா.ம.க., கைப்பற்றியதன் வாயிலாக, மூன்றாவது பெரிய அரசியல் சக்தி என்பதை, மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.

'டவுட்' தனபாலு: உங்கள் கட்சி தோன்றிய காலம்; நீங்கள் உழைத்த உழைப்பு; கட்சியினரின் பலம் போன்றவற்றை வைத்து பார்க்கும் போது, உள்ளாட்சி தேர்தலில் குறைந்தபட்சம் இரண்டாவது இடத்திலாவது வந்திருக்க வேண்டும். ஆனாலும் நீங்கள் மூன்றாவது இடம் கிடைத்துள்ளதை பெருமையாக பேசிக் கொள்கிறீர்கள்... அதை பார்க்கும் போது, கமல் கட்சி, சீமான் கட்சி, வேல்முருகன் கட்சியைத் தான் நீங்கள் போட்டியாக வைத்துள்ளீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது!

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்கள் பன்னீர்செல்வம்,பழனிசாமி: அ.தி.மு.க., ஆட்சியில் இரு சட்டசபை தேர்தல்கள், இரு லோக்சபா தேர்தல்கள், இரு ஊரக உள்ளாட்சி தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தி முடித்திருக்கிறோம். ஆனால், ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டுமான ஊரக உள்ளாட்சி தேர்தலை, தி.மு.க., அரசு இரண்டு கட்டங்களாக நடத்தியது; அதில் ஏதோ உள்ளர்த்தம் இருக்கிறது.

'டவுட்' தனபாலு: உங்களின், 'டவுட்'டில் நியாயமே இல்லை. நீங்கள் சொல்வது போல எந்த உள்ளர்த்தமும் இல்லை. புதிய அரசு பதவியில் அமர்ந்துள்ளது; பல திட்டங்களை செயல்படுத்துகிறது; மக்களுக்கு ஈர்ப்பு உள்ளது. இன்னும் ஆண்டுகள் சில கழியட்டும். இப்போதைய வெற்றி அப்போது கிடைப்பது கஷ்டமே!

முதல்வர் ஸ்டாலின்: ஒன்பது மாவட்டங்களில் தி.மு.க.,வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மகத்தான வெற்றியைப் பெற்று உள்ளன. ஐந்து மாத தி.மு.க., ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று. சாதனைச் சரித்திரம் தொடர்வதற்கு மட்டுமல்ல, செய்த சாதனைகளுக்கான மக்களின் அங்கீகாரமாகவும் இந்த வெற்றி அமைந்துள்ளது.

'டவுட்' தனபாலு: நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். கிராமங்களில் ஓட்டு போட்ட மக்களை கேட்டால், ஓட்டுக்கு இவ்வளவு பணம் என, தேர்தலில் பணம் தான் பிரதானமாக விளையாடியது என்கின்றனர். எப்படியோ, இந்த வெற்றிக்கு பின்பாவது, தேர்தலில் பணம் விளையாடுவதை தடுத்து நிறுத்தி, நியாயமான தேர்தலுக்கு வழி ஏற்படுத்துவீர்கள் என்பதில், 'டவுட்'டே இல்லை!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
15-அக்-202118:31:20 IST Report Abuse
D.Ambujavalli நேர்மையான தேர்தல் ........? இந்த ஜோக் எதுவும் இனி சாத்தியமே இல்லை நோட்டுகள் சம்பாதித்த ஓட்டுகள் என்பது பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X