சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி மண் எடுத்த லாரி: சுற்றி வளைத்து மக்கள் 'சிறை'

Added : அக் 15, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்:வெள்ளிமலைபட்டினத்தில், அனுமதியின்றி மண் எடுத்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.வெள்ளிமலைபட்டினம், ஆட்டுக்காரன் கோவில் அருகே, அனுமதியின்றி மணல் எடுத்த இரண்டு லாரிகளை, நேற்றுமுன்தினம் இரவு பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதுகுறித்து, வருவாய் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு, தொண்டாமுத்தூர் வருவாய்

தொண்டாமுத்தூர்:வெள்ளிமலைபட்டினத்தில், அனுமதியின்றி மண் எடுத்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.வெள்ளிமலைபட்டினம், ஆட்டுக்காரன் கோவில் அருகே, அனுமதியின்றி மணல் எடுத்த இரண்டு லாரிகளை, நேற்றுமுன்தினம் இரவு பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதுகுறித்து, வருவாய் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு, தொண்டாமுத்தூர் வருவாய் ஆய்வாளர் வெங்கடேஷ் மற்றும் வி.ஏ.ஓ., கங்கேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.விசாரணைக்குபின், இரண்டு லாரிகளும் ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று மதியம் வரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை.இப்பகுதியில், கடந்த 8ம் தேதி, அனுமதியின்றி மண் எடுத்ததாக, இரண்டு லாரிகள் மீது ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.இப்பகுதியில், மண் திருட்டுக்கு இடைவெளி விட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும், திருட்டு அதிகரித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக மண் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொண்டாமுத்தூர் வருவாய் ஆய்வாளர் வெங்கடேஷ் கூறுகையில், "வெள்ளிமலைபட்டினத்தில், லாரியில் மண் எடுத்து செல்வதாக புகார் வந்தது. சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து, இரண்டு லாரிகளையும், ஆலாந்துறை போலீசில் ஒப்படைத்து, அறிக்கை அளித்துள்ளேன்,"என்றார்.பேரூர் டி.எஸ்.பி., திருமால் கூறுகையில், "இரண்டு லாரிகளும் மண் எடுக்க அனுமதி வைத்திருந்தனர். அதன் உண்மை நிலை குறித்து விசாரித்து வருகிறோம்," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X