அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: தி.மு.க.,வினருக்கு ஒளிமயமான எதிர்காலம்!

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (89)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒன்பது மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி உள்ளது. பொன் விழா கொண்டாடும் அ.தி.மு.க., படுதோல்வி அடைந்து அசிங்கப்பட்டுப் போயிருக்கிறது.தனித்து போட்டியிட்ட பா.ம.க., நினைத்தபடி நிறைய
DMK, MK Stalin, CM Stalin, Stalin


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒன்பது மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி உள்ளது. பொன் விழா கொண்டாடும் அ.தி.மு.க., படுதோல்வி அடைந்து அசிங்கப்பட்டுப் போயிருக்கிறது.

தனித்து போட்டியிட்ட பா.ம.க., நினைத்தபடி நிறைய இடங்களில் வெற்றி பெற முடியவில்லை. நடிகர் கமலின், ம.நீ.மய்யமும், சீமானின் நாம் தமிழர் கட்சியும், தே.மு.தி.க., மற்றும் அ.ம.மு.க., கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.'நடிகர் விஜய் மக்கள் இயக்கம்' சார்பில் போட்டியிட்ட ரசிகர்கள், 110 இடங்களில் வெற்றி பெற்று அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.


latest tamil news


'தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றவில்லை' என்ற அ.தி.மு.க., - பா.ஜ.,வின் வாதங்கள், இந்த உள்ளாட்சி தேர்தலில் எடுபடவில்லை. 'ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஓட்டு அளித்தால் தான், நம் கோரிக்கைகள் நிறைவேறும்' என்ற அசைக்க முடியாத முடிவுக்கு மக்கள் வந்து விட்டனர் என்பதை தான், இந்த ஊராட்சி தேர்தல் முடிவுகள் அம்பலப்படுத்தி உள்ளன.

இந்த தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்யாமலேயே, தி.மு.க., பெருவாரியான இடங்களை கைப்பற்றி உள்ளது. இது நிச்சயம் அ.தி.மு.க., தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கும். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை அடித்து சொத்து சேர்த்திருப்பதை, தி.மு.க., பகிரங்கப்படுத்தியது. இதுவும், அ.தி.மு.க.,வின் படுதோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.

ஜெயலலிதாவுக்கு இருந்த துணிச்சல் பழனிசாமிக்கோ, பன்னீர்செல்வத்திற்கோ இல்லை என்பது தான், நிதர்சனமான உண்மை. இனிமேலும் அ.தி.மு.க.,வுக்கு இரட்டை தலைமை ஒத்துவராது.மருத்துவர் ராமதாசுக்கு, 'பா.ம.க.,விற்கு தனி செல்வாக்கு ஏதும் இல்லை' என்பதை, மக்கள் புரிய வைத்து விட்டனர்.

சீமான், தினகரன், கமல் போன்றோரை மக்கள் ரசிக்கின்றனரே தவிர, ஆதரிக்கவில்லை என்பதை, சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் தெளிவாக எடுத்து காட்டியுள்ளன. ஆட்சியில் இருக்கும் இந்த ஐந்து ஆண்டுகளும், தி.மு.க.,வினருக்கு மட்டும் ஒளிமயமாக இருக்கும் என்பது தெளிவாகி விட்டது.

Advertisement
வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
15-அக்-202122:37:15 IST Report Abuse
Sathyanarayanan Subramanian தேர்தல் ஆணையம் ஆட்சியாளர்கள் கையில் ஊராட்சி மற்றும் ஒன்றிய தலைவர்கள் பதவிகளை அள்ளிவிட்டனர்
Rate this:
Cancel
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
15-அக்-202122:34:57 IST Report Abuse
Sathyanarayanan Subramanian ஆபீஸ் இனிமேல் நல்ல எதிர்காலம் ஆட்டைய போடலாம்
Rate this:
Cancel
vigneshh - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
15-அக்-202121:40:47 IST Report Abuse
vigneshh கொள்ளை அடிக்க சொல்லிட்டாருல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X