பொது செய்தி

தமிழ்நாடு

தொழில்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு

Added : அக் 15, 2021
Share
Advertisement
கோவை:ஐ.டி.ஐ., காலியிடங்களுக்கு 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை, 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கோவையிலுள்ள மூன்று அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஓராண்டு, இரண்டாண்டு தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களை பூர்த்தி செய்திட, எட்டு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேரடி சேர்க்கை நடந்து

கோவை:ஐ.டி.ஐ., காலியிடங்களுக்கு 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை, 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கோவையிலுள்ள மூன்று அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஓராண்டு, இரண்டாண்டு தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களை பூர்த்தி செய்திட, எட்டு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேரடி சேர்க்கை நடந்து வருகிறது.ஆண்களுக்கு, 14 முதல் 40 வயது வரையும் வயது வரம்புண்டு. பெண்களுக்கு, 14 முதல் வயது உச்ச வரம்பு இல்லை.இதில் சேரும் மாணவர்களுக்கு, அரசு தரப்பில் வழங்கப்படும் புத்தகம், வரைபடக்கருவி, சீருடை, இலவச பஸ் பாஸ், மிதிவண்டி, லேப்டாப், மாத உதவித்தொகை, விடுதி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு உணவு வசதியுடன், தங்கும் விடுதி வசதிகள், தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு, 0422- 2642041/ 9442624516/8667408507/9443171698/8015012040 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X