பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுத பூஜையையொட்டி மருதமலையில் தரிசனம்

Added : அக் 15, 2021
Share
Advertisement
வடவள்ளி:மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், ஆயுதபூஜையொட்டி சுவாமி கும்பிட ஏராளமான பக்தர்கள் நேற்று திரண்டனர்.இக்கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, கடந்த 7ம் தேதி, உற்சவ மூர்த்திகள் கொலு வைக்கப்பட்டது. கொலுவில் உள்ள உற்சவ மூர்த்திகளுக்கு, நாள்தோறும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில், ஆயுத பூஜையையொட்டி, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு,

வடவள்ளி:மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், ஆயுதபூஜையொட்டி சுவாமி கும்பிட ஏராளமான பக்தர்கள் நேற்று திரண்டனர்.இக்கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, கடந்த 7ம் தேதி, உற்சவ மூர்த்திகள் கொலு வைக்கப்பட்டது. கொலுவில் உள்ள உற்சவ மூர்த்திகளுக்கு, நாள்தோறும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில், ஆயுத பூஜையையொட்டி, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.சுப்பிரமணிய சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயுத பூஜையை ஒட்டி ஏராளமான, பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமியை தரிசித்து சென்றனர்.இன்று விஜயதசமியையொட்டி, சுப்பிரமணிய சுவாமி, குதிரை வாகனத்தில் எழுந்தருளி, அம்பை எய்யும் விழா நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X