தடுப்பூசி செலுத்தியதில் டாப்; மருத்துவ குழுவினருக்கு பாராட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்தியதில் 'டாப்'; மருத்துவ குழுவினருக்கு பாராட்டு

Added : அக் 15, 2021
Share
கோவை:கோவை மாநகராட்சியில், 97 சதவீதத்தினருக்கு மேலாக, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட, 7 வார்டுகளை சேர்ந்த மருத்துவ குழுவினருக்கு, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும், 18 வயதுக்கு மேற்பட்டோரில் ஒருவர் கூட விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக, வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும்

கோவை:கோவை மாநகராட்சியில், 97 சதவீதத்தினருக்கு மேலாக, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட, 7 வார்டுகளை சேர்ந்த மருத்துவ குழுவினருக்கு, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும், 18 வயதுக்கு மேற்பட்டோரில் ஒருவர் கூட விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக, வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.இதில், 11, 23, 24, 60, 64, 66, 96 ஆகிய ஏழு வார்டுகளில், 97 சதவீதத்தினருக்கு மேலாக தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியோர், உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்போர் மற்றும் வெளியூரில் தடுப்பூசி செலுத்தி விட்டதாக கூறுவோர் என சிலர் இருக்கின்றனர்.அவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. வீடு வீடாகச் சென்று கண்டறிந்து, அவர்களுக்கு 'மொபைல் யூனிட்' மருத்துவ பணியாளர்கள் தடுப்பூசி செலுத்துவர்.இச்சூழலில், தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட, ஏழு வார்டுகளை சேர்ந்த மருத்துவ குழுவினருக்கு, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.நிகழ்ச்சியில், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், நகர்நல அலுவலர் சதீஷ்குமார், உதவி நகர் நல அலுவலர் வசந்த்திவாகர், மண்டல சுகாதார அலுவலர்கள் திருமால், ராமச்சந்திரன், சந்திரசேகரன், ராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஜோரா கை தட்டுவோம்!நிகழ்ச்சியில், டாக்டர்கள் பாண்டிகுமார், கிருத்திகா, முகுந்தன், புகழ்வேந்தன், ஜீவரத்தினம், செவிலியர்கள் அருணா ஜோதிமணி, ஜெயலட்சுமி, பெல்சியா, அபிராமி ஜேன், நித்யா, சுகாதார அலுவலர் முருகா, சுகாதார ஆய்வாளர்கள் ஸ்ரீரங்கராஜ், மணிவண்ணன், அரவிந்தன் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் பாலமுரளி, கார்த்தி, சுரேஷ்குமார், ரமேஷ், பரமசிவம் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கி, அமைச்சர் சுப்ரமணியன் பாராட்டினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X