குறைந்து வருகிறது சிறுவாணி நீர்மட்டம்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குறைந்து வருகிறது சிறுவாணி நீர்மட்டம்!

Added : அக் 15, 2021
Share
கோவை;மழைப்பொழிவு இல்லாத போதிலும், சிறுவாணி அணையில் இருந்து, 2ம் நாளாக நேற்று தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தமிழக அரசு அதிகாரிகள் மவுனம் சாதிக்கின்றனர்.மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கேரள வனப்பகுதிக்குள் சிறுவாணி அணை அமைந்திருக்கிறது. இதன் உயரம், 50 அடி. சில ஆண்டுகளுக்கு முன், அம்மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது.அப்போது, பாதுகாப்பு

கோவை;மழைப்பொழிவு இல்லாத போதிலும், சிறுவாணி அணையில் இருந்து, 2ம் நாளாக நேற்று தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தமிழக அரசு அதிகாரிகள் மவுனம் சாதிக்கின்றனர்.மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கேரள வனப்பகுதிக்குள் சிறுவாணி அணை அமைந்திருக்கிறது. இதன் உயரம், 50 அடி. சில ஆண்டுகளுக்கு முன், அம்மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது.அப்போது, பாதுகாப்பு காரணங்களை கூறி, அணைகளில் மொத்த கொள்ளளவில், 5 அடி குறைவாக நீர் தேக்குவது என, அம்மாநில அரசு முடிவு செய்தது. ஆனால், சில அணைகளில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கப்பட்டது.சிறுவாணியில் மட்டும், 45 அடிக்கு மட்டுமே நீர் இருப்பு வைக்கப்படுகிறது. கூடுதலாக நீர் வரத்து இருந்தால், மதகுகளை திறந்து, தண்ணீரை வெளியேற்றுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.நடப்பாண்டு முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க, கேரள அரசுக்கு அழுத்தம் கொடுக்க, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரும், மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதின. ஆனால், அணையில் நீர் கசிவு இருப்பதால், 45 அடிக்கே இருப்பு வைக்கப்படும் என, கேரள நீர்ப்பாசனத்துறை தெரிவித்திருந்தது. ஆனால், நீர் மட்டம், 45 அடியாக உயர்வதற்கு முன்பே, 40 செ.மீ., உயரத்துக்கு மதகை திறந்து, தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இதன் காரணமாக, அணையில் நீர் மட்டம் குறைந்து வருகிறது.அணைக்கு நீர் வரத்து எப்படி இருக்கிறது; உண்மையாகவே கசிவு இருக்கிறதா என்பதை நேரில் சென்று அறியாமல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் மவுனம் சாதித்து வருகின்றனர்.இதன் காரணமாக, சிறுவாணியில் போதிய மழைப்பொழிவு கிடைத்தும் தண்ணீர் தேக்க முடியாத சூழல் நீடிக்கிறது.கலவரம் தருகிறது நீர்மட்ட நிலவரம்!11ம் தேதி அணையின் நீர் மட்டம் - 43.82 அடியாக இருந்தது. 12ம் தேதி, 120 மி.மீ., மழை பதிவானதால், 44.35 அடியாக நீர் மட்டம் அதிகரித்தது. அணைக்கு நீர் வரத்து காணப்பட்டதால், பாதுகாப்பு காரணங்களை கூறி, 40 செ.மீ., உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், 13ம் தேதி, 43.90 அடியாக நீர் மட்டம் சரிந்தது. நேற்று கன மழை இல்லாத போதிலும், இரண்டாம் நாளாக தண்ணீர திறந்து விடப்பட்டதால், 43 அடியாக நீர் மட்டம் சரிந்திருக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X