பொது செய்தி

தமிழ்நாடு

முடங்கிய தொழில் செழிக்கட்டும் தொழிலாளர் வாழ்வு சிறக்கட்டும்!

Added : அக் 15, 2021
Share
Advertisement
கோவை:கடந்தாண்டு முடங்கிய தொழில்கள் இவ்வாண்டு செழிக்க வேண்டும் என, தொழில்முனைவோர், தொழிலாளர்கள் உருக்கமாக வேண்டிக்கொண்டனர்.தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நேற்று கொண்டாடப்பட்டது. தொழிற்சாலைகளில் வாழை மரம், மா இலை தோரணம், அலங்கார தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது. இயந்திரங்களை சுத்தம் செய்து, சந்தனம்,

கோவை:கடந்தாண்டு முடங்கிய தொழில்கள் இவ்வாண்டு செழிக்க வேண்டும் என, தொழில்முனைவோர், தொழிலாளர்கள் உருக்கமாக வேண்டிக்கொண்டனர்.தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நேற்று கொண்டாடப்பட்டது. தொழிற்சாலைகளில் வாழை மரம், மா இலை தோரணம், அலங்கார தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது. இயந்திரங்களை சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் பொட்டு வைத்தும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர். பூஜை, வழிபாட்டுக்குப்பிறகு, தொழிலாளர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.கொரோனா காரணமாக முடங்கிய தொழில்கள் இவ்வாண்டு செழிக்க வேண்டும், தொழில் துறையினருக்கு வசந்தம் பிறக்க வேண்டும், மீண்டும் இன்னொரு கொரோனா தாக்கம் கூடாது என, தொழிலாளர்கள் உள்ளிட்டோர் உருக்கமாக வேண்டிக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X