ரத்தினம் கல்லுாரியில் கலாம் பிறந்த தின விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரத்தினம் கல்லுாரியில் கலாம் பிறந்த தின விழா

Added : அக் 15, 2021
Share
கோவை:அப்துல்கலாமின் 90வது பிறந்த நாள் விழா, கோவை ரத்தினம் கலை, அறிவியல் கல்லுாரியில் கொண்டாடப்பட்டது.கல்லுாரியின் இயற்பியல், பயோடெக்னாலஜி துறை சார்பில் விழா நடந்தது. பாரதியார் பல்கலையில் செயல்பட்டு வரும், மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் டி.ஆர்.டி.ஓ., லைப் சயின்ஸ் மைய விஞ்ஞானி, கதிர்வேலு விழாவை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர், 'நாளைய இந்தியாவுக்கான

கோவை:அப்துல்கலாமின் 90வது பிறந்த நாள் விழா, கோவை ரத்தினம் கலை, அறிவியல் கல்லுாரியில் கொண்டாடப்பட்டது.கல்லுாரியின் இயற்பியல், பயோடெக்னாலஜி துறை சார்பில் விழா நடந்தது. பாரதியார் பல்கலையில் செயல்பட்டு வரும், மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் டி.ஆர்.டி.ஓ., லைப் சயின்ஸ் மைய விஞ்ஞானி, கதிர்வேலு விழாவை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர், 'நாளைய இந்தியாவுக்கான பார்வை' என்ற தலைப்பில், சமூக நலன்களுக்கான ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கினார். விழாவின் ஒரு பகுதியாக நடந்த அறிவியல் கண்காட்சி மற்றும் ஐடியா எக்ஸ்போ, 2021ல், மாணவர்களின் பல்வேறு கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கல்லுாரியின் முதன்மை நிர்வாக அலுவலர் மாணிக்கம், முதல்வர் முரளிதரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X