அ.மு.ம.க., தே.மு.தி.க.,வை முந்திய சுயேச்சை வேட்பாளர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.மு.ம.க., தே.மு.தி.க.,வை முந்திய சுயேச்சை வேட்பாளர்

Added : அக் 15, 2021
Share
அன்னுார்:மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், சுயேச்சை வேட்பாளரை விட, தே.மு.தி.க., மற்றும் அ.ம.மு.க., கட்சிகள் குறைந்த வாக்குகள் பெற்று உள்ளன.கோவை மாவட்ட கவுன்சிலர் 3வது வார்டில் நடந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் ஆனந்தன், அ.தி.மு.க., வேட்பாளர் கருப்பசாமியை, 13,041 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.இவர்கள் தவிர, நான்கு கட்சி மற்றும் ஐந்து சுயேச்சைகள் போட்டியிட்டனர். தி.மு.க., அதிமுக தவிர

அன்னுார்:மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், சுயேச்சை வேட்பாளரை விட, தே.மு.தி.க., மற்றும் அ.ம.மு.க., கட்சிகள் குறைந்த வாக்குகள் பெற்று உள்ளன.கோவை மாவட்ட கவுன்சிலர் 3வது வார்டில் நடந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் ஆனந்தன், அ.தி.மு.க., வேட்பாளர் கருப்பசாமியை, 13,041 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.இவர்கள் தவிர, நான்கு கட்சி மற்றும் ஐந்து சுயேச்சைகள் போட்டியிட்டனர். தி.மு.க., அதிமுக தவிர ஒன்பது பேரும் டிபாசிட் இழந்தனர். நா.த.க., வேட்பாளர் மணிகண்டன் 873 ஓட்டுகளுடன் மூன்றாம் இடம் பிடித்தார். ம.நீ.ம., வேட்பாளர் வெங்கிட்டான் 244 ஓட்டுகள் பெற்றார்.சுயேச்சை வேட்பாளர் முருகன் 193களுடன் 5ம் இடம் பிடித்தார். அ.ம.மு.க., வேட்பாளர் கஸ்துாரி, 98; தே.மு.தி.க., 173 ஓட்டுகள் பெற்றனர்.மற்றொரு சுயேச்சை வேட்பாளர் முருகேசன், 163 ஓட்டுகள் பெற்றுள்ளார். அ.ம.மு.க., தே.மு.தி.க., கட்சிகள் அரை சதவீதம் ஓட்டுகள் கூட பெறவில்லை. 718 செல்லாத ஓட்டுகள் பதிவாகியுள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X