பொது செய்தி

தமிழ்நாடு

பசுமை வனத்தில் சொட்டு நீர் பாசனம்

Added : அக் 15, 2021
Share
Advertisement
கோவில்பாளையம்:காலிங்கராயன் குளத்தில், பசுமை வனத்தில், சொட்டுநீர் பாசனம் அமைக்கும் பணி நேற்று நடந்தது.சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம், கொண்டையம்பாளையம் ஊராட்சியில், 120 ஏக்கர் பரப்பளவில் காலிங்கராயன் குளம் உள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளம், பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்தது.இந்நிலையில், தன்னார்வலர்கள் மற்றும் 12 அமைப்புகள்

கோவில்பாளையம்:காலிங்கராயன் குளத்தில், பசுமை வனத்தில், சொட்டுநீர் பாசனம் அமைக்கும் பணி நேற்று நடந்தது.சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம், கொண்டையம்பாளையம் ஊராட்சியில், 120 ஏக்கர் பரப்பளவில் காலிங்கராயன் குளம் உள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளம், பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்தது.இந்நிலையில், தன்னார்வலர்கள் மற்றும் 12 அமைப்புகள் ஒன்று சேர்ந்து, காலிங்கராயன் குளம் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தினர்.இந்த குளத்தில் கடந்த, 90 வாரங்களாக, குளம் துார்வாரும் பணி நடந்து வருகிறது. மூன்று கி.மீ., துாரத்திற்கு கரைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு உள்ளன. இந்த குளத்துக்கு மழைநீர் வரும் ஏழு பாதைகளில், நான்கு பாதைகள் முழுக்க சீரமைக்கப்பட்டுள்ளன. பூவரசன், மந்தாரை, வேம்பு, மகிழம், மாதுளை, சீதா, கொய்யா, பலா உள்ளிட்ட 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.இந்த மரக்கன்றுகளுக்கு சேதமில்லாமல், களை ஏற்படாமல், நீர் விடுவதற்காக, சொட்டு நீர் பாசனம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று சொட்டுநீர் பாசனம் அமைக்கும் பணி நடந்தது.'முதல்கட்டமாக ஒரு பகுதி மரக்கன்றுகளுக்கு மட்டும் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்படுகிறது. விரைவில் முழுமையாக 3,000 மரக்கன்றுகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டு விடும்' என, தன்னார்வலர்கள் தெரிவித்தனர். இதில், காலிங்கராயன், அக்ரஹார சாமக்குளம் உள்ளிட்ட அமைப்பினர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X