தவறான விளம்பரத்திற்கு இழப்பீடு; சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடி

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : தவறான விளம்பரம் தொடர்பாக வாகன முகவர் இழப்பீடு தரக் கோரி தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஏ.பி.மோட்டார்ஸ் என்ற வாகன முகமை நிறுவனத்திடம், 'போர்டு பியஸ்டா' காரை ஒருவர் வாங்கியுள்ளார். அந்த கார், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 31 கி.மீ., செல்வதாக விளம்பரத்தில்
Ford Fiesta, Supreme Court, SC, சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி : தவறான விளம்பரம் தொடர்பாக வாகன முகவர் இழப்பீடு தரக் கோரி தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஏ.பி.மோட்டார்ஸ் என்ற வாகன முகமை நிறுவனத்திடம், 'போர்டு பியஸ்டா' காரை ஒருவர் வாங்கியுள்ளார். அந்த கார், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 31 கி.மீ., செல்வதாக விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 15 - 16 கி.மீ., துாரம் மட்டுமே சென்றதால், வாகன உரிமையாளர், தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், தவறான விளம்பரம் வெளியிட்டதற்காக போர்டு மற்றும் ஏ.பி.மோட்டார்ஸ் நிறுவனங்கள், வாகன உரிமையாளருக்கு 7 லட்சத்து 43 ஆயிரத்து 200 ரூபாய் இழப்பீடு மற்றும் வழக்குச் செலவாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து போர்டு நிறுவனம் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தது. ஏ.பி.மோட்டார்ஸ் நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையிலான அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது.


latest tamil news



தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கார் விளம்பரம் 2007, ஜூன் 20ம் தேதி வெளியாகியுள்ளது. ஆனால் மனுதாரர் 2007 மார்ச் 9ல் காரை வாங்கியுள்ளார். அதனால் தவறான வழி நடத்திய விளம்பரத்தால் பாதிக்கப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. மேலும் கார் முகமை நிறுவனம், கார் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறதே தவிர, சுதந்திரமாக செயல்படுவதில்லை. எனவே இழப்பீடு வழங்கக் கோரி தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
15-அக்-202110:07:37 IST Report Abuse
PRAKASH.P கற்பனை விளம்பரம் தடைசெய்யபடவேண்டும்
Rate this:
Cancel
15-அக்-202108:26:04 IST Report Abuse
அப்புசாமி இப்பல்லாம் டீ.வி ல தவறாக விளம்பரம் காமிச்சு, மேலேயே கற்பனை க்காட்சி, கற்பனை சித்தரிப்புன்னு சோப்பு பவுடரிலிருந்து, கொசு வத்தி டப்பாக் டப்பாக்னு விளம்பரம் செய்தறாங்களே. மக்களை ஏமாத்துவதே பொழப்பு.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
15-அக்-202108:25:48 IST Report Abuse
duruvasar கரெக்டா பாயிண்டை புடிச்சிட்டாரு. அவங்க இஞ்சினிலே தேதிய ஃபோராகிராம் செஞ்சிட்டாங்ல்ல. முன்தேதியில் வாங்கினா ஃபோராகிராம் வேலை செய்யாதே. மிசினுக்கு தெரியுமில்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X