பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை

Added : அக் 15, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், புற்றுநோய் அறுவை சிகிச்சை, மேற்கொள்ளப்பட்டது.இதுகுறித்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, தலைமை டாக்டர் கண்ணன் கூறியதாவது:மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த, 53 வயதுடைய பெண்ணுக்கு, கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.நோயின் தாக்கம், மூன்றாம் நிலையில் இருந்தது. வழக்கமாக, இதுபோன்ற நோயாளிகளை, கோவை அரசு

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், புற்றுநோய் அறுவை சிகிச்சை, மேற்கொள்ளப்பட்டது.இதுகுறித்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, தலைமை டாக்டர் கண்ணன் கூறியதாவது:மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த, 53 வயதுடைய பெண்ணுக்கு, கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.நோயின் தாக்கம், மூன்றாம் நிலையில் இருந்தது. வழக்கமாக, இதுபோன்ற நோயாளிகளை, கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்வோம்.தனியார் மருத்துவமனை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேஷிடம் கேட்டபோது, இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய முன்வந்தார்.இதையடுத்து, இப்பெண்ணுக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையிலேயே டாக்டர் கார்த்திகேஷ் தலைமையில், டாக்டர்கள் கண்ணன், அபிநயா, சத்தியவாணி ஆகிய 4 பேர், மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, புற்றுநோய் பாதிக்கப்பட்டிருந்த கர்ப்பப்பையை முற்றிலுமாக அகற்றினர். அதன்பிறகான சிகிச்சைகளும் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டன.மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதன்முறையாக இந்த அறுவை சிகிச்சை நடந்தது.இனிவரும் காலங்களிலும், இது மாதிரியான அறுவை சிகிச்சை செய்ய, டாக்டர் கார்த்திகேஷ் ஒப்புக் கொண்டுள்ளார்.எனவே, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதை தவிர்த்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையிலேயே, இது மாதிரியான அறுவை சிகிச்சை செய்யப்படும்.இவ்வாறு, டாக்டர் கண்ணன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X