பொது செய்தி

தமிழ்நாடு

வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி அவசியம்

Added : அக் 15, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறை வந்துள்ள வடமாநில தொழிலாளர்களை, அந்தந்த எஸ்டேட் நிர்வாகங்கள் கண்காணிக்க வேண்டும், என, அரசு மருத்துவமனை டாக்டர் தெரிவித்தார்.வால்பாறை அடுத்துள்ள, ஆனைமலை கிளப்பில், வடமாநில தொழிலாளர்கள் விபரம் சேகரிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் மகேஷ்ஆனந்தி முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில், வால்பாறை எஸ்டேட் மருத்துவமனையை
 வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி அவசியம்

வால்பாறை:வால்பாறை வந்துள்ள வடமாநில தொழிலாளர்களை, அந்தந்த எஸ்டேட் நிர்வாகங்கள் கண்காணிக்க வேண்டும், என, அரசு மருத்துவமனை டாக்டர் தெரிவித்தார்.வால்பாறை அடுத்துள்ள, ஆனைமலை கிளப்பில், வடமாநில தொழிலாளர்கள் விபரம் சேகரிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் மகேஷ்ஆனந்தி முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில், வால்பாறை எஸ்டேட் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள், எஸ்டேட் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பாபுலட்சுமணன் பேசும்போது, ''மலைப்பகுதியில் பணிபுரியும் பெரும்பாலான எஸ்டேட் தொழிலாளர்களுக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், வெளிமாநில தொழிலாளர்கள் தடுப்பூசி போடவும், பிரசவ காலங்களில் மருத்துவமனைக்கு வருவதையும் தவிர்க்கின்றனர். அவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.இதனால், பல்வேறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வெளிமாநில தொழிலாளர்களை அந்தந்த எஸ்டேட் மருத்துவமனை டாக்டர்கள் கண்காணித்து, அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதனால், உயிரிழப்பு தவிர்ப்பதோடு, வால்பாறையில் கொரோனா தொற்று பரவலையும் கட்டுப்படுத்த முடியும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X