பொது செய்தி

தமிழ்நாடு

மழை நீர் தேங்கும் பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

Added : அக் 15, 2021
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை ஒன்றியத்தில், மழை பெய்வதால், டெங்கு காய்ச்சல் பரவுவதை தவிர்க்க, 40 'மஸ்துார்' நியமிக்கப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், கடந்த, ஒரு மாதமாக மழை பெய்கிறது. வீடுகள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களில், மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், டெங்கு கொசு உற்பத்தி அதிகரித்து, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனால்,

ஆனைமலை:ஆனைமலை ஒன்றியத்தில், மழை பெய்வதால், டெங்கு காய்ச்சல் பரவுவதை தவிர்க்க, 40 'மஸ்துார்' நியமிக்கப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், கடந்த, ஒரு மாதமாக மழை பெய்கிறது. வீடுகள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களில், மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், டெங்கு கொசு உற்பத்தி அதிகரித்து, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனால், சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பினர், டெங்கு தடுப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.இதற்காக, ஆனைமலை ஒன்றியத்திலுள்ள, 19 ஊராட்சிகளுக்காக, 20 'மஸ்துார்'; ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம் மற்றும் கோட்டூர் பேரூராட்சிகளுக்கு தலா, பத்து பேர் என மொத்தம், 60 'மஸ்துார்' பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.'மஸ்துார்' பணியாளர்கள் மற்றும் ஊராட்சி, பேரூராட்சி பணியாளர்கள் வீடுகளில் குடிநீர் அல்லாத தண்ணீரில், 'அபேட்' மருந்து கரைசல் கலக்குகின்றனர். குடியிருப்பு பகுதிகளில், கொசு மருந்து தெளித்து வருகின்றனர்.மழைநீர் தேங்கி நிற்கும் வகையிலுள்ள டயர்கள், ஆட்டுக்கல், பழைய தொட்டிகள், உடைந்த பிளாஸ்டிக் குடம் உள்ளிட்டவற்றில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றி வருகின்றனர்.மேலும், டெங்கு பரப்பும் வகையில் மழைநீர் தேங்கி நின்றால் அபராதம் விதிக்கப்படுமென, மக்கள் மற்றும் வணிக கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகளவில் டெங்கு காய்ச்சல் பதிவாகும் பகுதிகளில், கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X