பொது செய்தி

தமிழ்நாடு

மனநலம் பாதித்தவர்களை காப்பகத்தில் சேர்க்கணும்

Added : அக் 15, 2021
Share
Advertisement
உடுமலை:வீதிகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை காப்பகத்தில், சேர்த்து பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை பஸ் ஸ்டாண்ட், மருத்துவமனை, கோவில் உள்ளிட்ட பொது இடங்களில், மனநலம் பாதித்த நபர்கள், அரைகுறை ஆடையுடன் வலம் வருகின்றனர். ஆதரவற்ற இவர்களுக்கு, முறையாக உணவும் கிடைப்பதில்லை. இவர்களை, மனநல காப்பகத்தில் சேர்த்து, உரிய

உடுமலை:வீதிகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை காப்பகத்தில், சேர்த்து பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை பஸ் ஸ்டாண்ட், மருத்துவமனை, கோவில் உள்ளிட்ட பொது இடங்களில், மனநலம் பாதித்த நபர்கள், அரைகுறை ஆடையுடன் வலம் வருகின்றனர். ஆதரவற்ற இவர்களுக்கு, முறையாக உணவும் கிடைப்பதில்லை. இவர்களை, மனநல காப்பகத்தில் சேர்த்து, உரிய பாதுகாப்பும் மற்றும் உதவிகள் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் கூறுகையில், 'நகரின், பல்வேறு பகுதிகளில், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அவ்வப்போது, நெடுஞ்சாலைகளில் நடந்து செல்வதையும் காண முடிகிறது. அவர்களை காப்பகத்தில், சேர்த்து முறையாக பராமரிக்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X