பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்... பள்ளியில் பெண் குழந்தைகள் தினவிழா

Added : அக் 15, 2021
Share
Advertisement
கோவை சைல்டுலைன், சமூக நலத்துறை, போலீஸ் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்டம் அமைப்புகள் சார்பில், நெகமம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில், 'சைல்டுலைன்' மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் பங்கேற்று, பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்துபேசினார். பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய சமூக நலத்துறை

கோவை சைல்டுலைன், சமூக நலத்துறை, போலீஸ் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்டம் அமைப்புகள் சார்பில், நெகமம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில், 'சைல்டுலைன்' மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் பங்கேற்று, பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்துபேசினார். பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய சமூக நலத்துறை அலுவலர் சோபனா, குழந்தை திருமணம், அதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விளக்கினார்.நெகமம் போலீசார் பங்கேற்று, பெண் குழந்தைகளுக்கான பாலியல் குற்றங்கள் பற்றி பேசினார். நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் சாவித்திரி மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். பள்ளி மாணவியருக்கு மரக்கன்றுகள் வினியோகிக்கப்பட்டன.
பள்ளியில் கைகழுவுதல் தினம்
கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்த நிலையில், பாதிப்பில் இருந்து விடுபட, சுகாதாரத்துறை சார்பில், சோப்பு கொண்டு கைகழுவுதல், சானிடைசர் பயன்படுத்துதல், முகக்கவசம் அணிதல், என, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.கடந்த, ஆண்டு அக்., 15ம் தேதி கைகழுவுதல் தினம் கடைபிடிக்கப்பட்டது. தற்போது, ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, கைகழுவுதல் தினம் கடைபிடிக்க வேண்டும். சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், முன் கூட்டியே நேற்று முன்தினம், பள்ளிகளில் கைகழுவுதல் தினம் நடந்தது
.கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்து, கைகழுவுதலின் அவசியத்தை வலியுறுத்தினார். முறையாக கைகழுவுதல் குறித்து, நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருந்துவர்கள், செவிலியர்கள் செய்முறை பயிற்சி அளித்தனர்.
கலாம் பிறந்தநாள் நிகழ்ச்சி
மடத்துக்குளம் காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கலாம் அவர்களின் வாழ்க்கை, சாதனைகள் மற்றும் அவர் சார்ந்த துறை பற்றிய கருத்துக்கள் மாணவர்களை சென்றடைய, கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ மாணவியர் பயன்படுத்த சானிடைசர் முகக்கவசம் கொடுக்கப்பட்டது.பி.எம்.எஸ்., சார்பில் மரியாதைபி.எம்.எஸ்., எனப்படும் பாரதிய மஸ்துார் சங்க நிறுவனரான தத்தோபந்த் தெங்கடி, தொழிலாளர்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்தவர். இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்ற கொள்கையின்படி, ஜாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர்.எனவே, அவரது நினைவு தினமான அக்., 14ம் தேதி, பி.எம்.எஸ்., சார்பில் நாடு முழுக்க சமூக நல்லிணக்க தினமாக அனுசரிக்கின்றனர்.
பொள்ளாச்சி பி.எம்.எஸ்., சார்பில், பஸ் ஸ்டாண்ட் முன், தத்தோபந்த் தெங்கடி உருவப்படம் வைத்து, மலர் துாவி மரியாதை செய்தும், அவரது கொள்கைகள் குறித்து பேசியும், சமூக நல்லிணக்க தினம் அனுசரிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், அமைப்பின் நகர தலைவர் ஆதித்யன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் ஆனந்தகிருஷ்ணன், துணைத்தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
வேளாண் விழிப்புணர்வு கருத்தரங்கு
உடுமலை வட்டார வேளாண்துறை சார்பில், விவசாயிகளுக்கான வேளாண் கருத்தரங்கம், வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்தது.கருத்தரங்கில், வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன், அரசின் தரிசு நில மேம்பாட்டு திட்டம் குறித்து பேசினார்.திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மனோகரன், மாவட்டத்தில், துறை சார்பில், மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.
ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் சிவக்குமார், தென்னை சாகுபடியில், உர மேலாண்மை, பராமரிப்பு, நோய் மற்றும் பூச்சி தாக்குதல் கட்டுப்பாடு மேலாண்மை குறித்து விரிவாக பேசினார்.கால்நடைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல்துறை உட்பட துறை அதிகாரிகள் பேசினர். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
ஏ.டி.எம்., வாகனங்கள் தேவை
வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட்களில், 30 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். பல்வேறு எஸ்டேட்களில் தொழிலாளர்களுக்கு, தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.இதனிடையே, மாதம் தோறும் தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தை எளிதில் பெற்று செல்ல வசதிக்காக நடமாடும் ஏ.டி.எம்., வாகனம் வேண்டும் என, கடந்த ஆண்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.இதனையடுத்து வால்பாறை எஸ்.பி.ஐ., வங்கி சார்பில், கடந்த மாதம் நடமாடும் ஏ.டி.எம்., வாகனம் கொண்டு வரப்பட்டு, எஸ்டேட் பகுதிக்கு தினமும் சென்று வருகிறது.

தொழிலாளர்கள் கூறுகையில், 'தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வரத்துவங்கியுள்ளனர். இதனால், எஸ்டேட் தொழிலாளர்கள் வால்பாறை நகரில் உள்ள ஏ.டி.எம்.,களுக்கு சென்று பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, வால்பாறையில் போனஸ் வழங்குவதற்கு முன், மற்ற வங்கிகள் சார்பில் கூடுதல் நடமாடும் ஏ.டி.எம்., வாகனங்களை எஸ்டேட் பகுதிக்கு இயக்க வேண்டும்,' என்றனர்.
பள்ளியில் சரஸ்வதி பூஜை
கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், சரஸ்வதி, ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியர் மாரியப்பன் தலைமை வகித்தார்.உதவி தலைமையாசிரியர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். விழாவையொட்டி, பள்ளி வளாகம். வகுப்பறைகள் சுத்தப்படுத்தப்பட்டு, பூஜை செய்யப்பட்டது. ஆசிரியர்கள் சரவணன், ரமேஷ், விஜயராகவன், முத்துக்கருப்பன், சலுகாமா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
துாய்மை பாரதம் கருத்தரங்கு
மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி யில் நாட்டு நலப்பணி திட்டமுகாம் நடக்கிறது. இதில்,50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, 'தூய்மை பாரதம்' விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. திட்டம் குறித்த விழிப்புணர்வு தகவல்களும், மாணவர்களின் கடமைகள் குறித்தும் விளக்கப்பட்டது. பின்னர், நாட்டு நலப்பணி திட்ட முகாமில், ஈடுபட்டுள்ளவர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை, பின்பற்றி பள்ளி வளாகத்தில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டனர். கொரோனா தடுப்பு முறைகள் பற்றியும் அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X