பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் பறிமுதல் என்னாச்சு? வனப்பகுதியில் சூழல் அபாயம்

Added : அக் 15, 2021
Share
Advertisement
ஆனைமலை;வால்பாறை, ஆழியாறு தமிழகத்தின் முக்கியசுற்றுலா பகுதிகளாக உள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.பெரும்பாலான சுற்றுலா பயணிகள், வனரோட்டில், தாங்கள் பயன்படுத்திய உணவு திண்பண்டங்கள், உணவு பொட்டலங்களின் பிளாஸ்டிக் கழிவுகளை வனத்தினுள் வீசுகின்றனர்.உணவுப்பொருட்களின் வாசனை, கவர்களின்நிறத்தால் கவரப்பட்டு, பிளாஸ்டிக் கழிவுகளை

ஆனைமலை;வால்பாறை, ஆழியாறு தமிழகத்தின் முக்கியசுற்றுலா பகுதிகளாக உள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.பெரும்பாலான சுற்றுலா பயணிகள், வனரோட்டில், தாங்கள் பயன்படுத்திய உணவு திண்பண்டங்கள், உணவு பொட்டலங்களின் பிளாஸ்டிக் கழிவுகளை வனத்தினுள் வீசுகின்றனர்.உணவுப்பொருட்களின் வாசனை, கவர்களின்நிறத்தால் கவரப்பட்டு, பிளாஸ்டிக் கழிவுகளை வனவிலங்குகள்உட்கொண்டு பரிதாபமாக மரணிக்கிறது. வனத்தினுள் பிளாஸ்டிக் பரவுவதை தடுக்க திட்டமிட்ட வனத்துறையினர், இரு ஆண்டுக்கு முன், ஆழியாறு சோதனைச் சாவடியில், இலவச துணிப்பை வழங்கும் திட்டத்தை துவங்கினர்.சுற்றுலா பயணிகளை சோதனையிட்டு அவர்களிடம் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை பறிமுதல் செய்து, அதற்கு மாற்றாக துணிப்பை கொடுத்தனர்.சில மாதங்கள் திட்டத்தை செயல்படுத்திய வனத்துறையினர் தற்போது, சுற்றுலா பயணிகளை முறையாக சோதனையிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை பறிமுதல் செய்யாமல் அலட்சியமாக உள்ளனர். இதனால், மீண்டும் வனத்தினுள் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து வனவிலங்குகள் பாதித்து வருகின்றன.வனத்துறையினர் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் கழிவுகளை பறிமுதல் செய்து, துணிப்பை வழங்க வேண்டும்.சோதனைச்சாவடியில் பிளாஸ்டிக் கழிவுகள்சேகரிப்பு மையம் அமைத்து, கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்ப வேண்டும் என்பதே, சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X