பொது செய்தி

தமிழ்நாடு

தொழிற்கல்வி படிக்க உதவித்தொகை

Added : அக் 15, 2021
Share
Advertisement
உடுமலை:முன்னாள் படைவீரரை சார்ந்த, தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியர், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில், 'அட்மினிஸ்டர் ஜெனரல் அண்ட் அபிசியல் டிரஸ்ட்' வாயிலாக, பிளஸ் 2 தேர்ச்சி பெற்று தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வில், 80 சதவீதம்

உடுமலை:முன்னாள் படைவீரரை சார்ந்த, தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியர், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில், 'அட்மினிஸ்டர் ஜெனரல் அண்ட் அபிசியல் டிரஸ்ட்' வாயிலாக, பிளஸ் 2 தேர்ச்சி பெற்று தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வில், 80 சதவீதம் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று, தொழிற்கல்வியில், முதலாம் ஆண்டில் 50 சதவீதம் பெற்ற, முன்னாள் படைவீரர் குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு, தலா, ஒரு லட்சம் ரூபாயும், தங்க பதக்கமும் வழங்கப்படும்.கடந்த, 2019--20 மற்றும் 2020- -21ம் ஆண்டுகளில் தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியர், இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம்.தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், விபரங்களுக்கு, 0421 2971127 என்ற எண்களில், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X