சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரள கழிவுகளை கொட்டிய லாரி சிறைபிடிப்பு: சோதனை சாவடியில் அலட்சியத்தால் அவலம்

Added : அக் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
உடுமலை:உடுமலை அருகே, கேரள மாநிலத்திலிருந்து கழிவுகளை கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்; ஊராட்சி நிர்வாகம் சார்பில், டிரைவரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.உடுமலை பகுதிகளில், பிரதான ரோடுகள் மட்டுமன்றி, கிராமங்களுக்கு செல்லும் ரோடுகளிலும், கேரளா மாநிலத்திலிருந்து, மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் கழிவுகள் கொட்டும் சம்பவங்கள் அதிகரித்து

உடுமலை:உடுமலை அருகே, கேரள மாநிலத்திலிருந்து கழிவுகளை கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்; ஊராட்சி நிர்வாகம் சார்பில், டிரைவரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.உடுமலை பகுதிகளில், பிரதான ரோடுகள் மட்டுமன்றி, கிராமங்களுக்கு செல்லும் ரோடுகளிலும், கேரளா மாநிலத்திலிருந்து, மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் கழிவுகள் கொட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நேற்று காலை, சோமவாரபட்டி ஊராட்சி, பொட்டிநாயக்கனுார் பிரிவு அருகே, விவசாய நிலம் மற்றும் ரோட்டோரத்தில், ரப்பர், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த லாரியை, அப்பகுதி மக்கள் சிறைபிடித்து, ஊராட்சி நிர்வாகத்துக்கும், குடிமங்கலம் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.மக்கள் கூறியதாவது: கேரள மாநிலம், கஞ்சிக்கோடு பகுதியிலிருந்து, பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் கழிவுகளை ஏற்றிக்கொண்டு, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக, பெதப்பம்பட்டி ரோட்டிற்கு வந்து, விவசாய நிலத்தில் கழிவுகளை கொட்டியுள்ளனர்.கேரளாவில் கழிவுகள் கொட்ட அனுமதியில்லாததால், அங்கு செல்லும் சில லாரி டிரைவர்கள், வாடகைக்கு ஆசைப்பட்டு, அபாயகரமான கழிவுகளை ஏற்றி வந்து, உடுமலை - ஆனைமலை ரோடு, திருப்பூர் ரோடு, தாராபுரம் ரோடு மற்றும் பொள்ளாச்சி ரோடு பகுதிகளில், இரவு நேரங்களில் கொட்டி வருகின்றனர்.கேரளா மாநிலத்திலிருந்து தமிழக எல்லைக்குள் நுழையும் போது, சோதனை சாவடிகள் உள்ளன. அங்குள்ள அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்தால், இது போல், கிராமப்பகுதிகள், விவசாய நிலங்களில், சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், அபாயகரமாக கழிவுகள் கொட்டுவதை தடுக்க முடியும். இவ்வாறு, தெரிவித்தனர்.கழிவுகளை கொட்ட வந்த காரைக்குடியை சேர்ந்த டிரைவர் கோபாலுக்கு, ஊராட்சி நிர்வாகத்தினர், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். குடிமங்கலம் போலீசார் கழிவுகளை கொட்டிய லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-அக்-202120:13:55 IST Report Abuse
Ram Pollachi மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூரிலிருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லும் வாழைக்காய்கள் அடிபடாமல் இருக்க வண்டியில் சுற்றப்படும் இலையை கூட அங்கே போட விடமாட்டார்கள். கடும் சுத்தம் கண்ணை பறித்து விடும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X