பொது செய்தி

தமிழ்நாடு

மலையில் நிறைவடைந்தது பருவமழை

Added : அக் 15, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறையில், இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப் பருவமழையினால், பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின.கனமழையால், 160 உயரமுள்ள சோலையாறு அணை இந்த ஆண்டில் நான்கு முறை நிரம்பியது. இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை சில தினங்களில் விடைபெறவுள்ள நிலையில், வால்பாறையில் கடந்த இரு நாட்களாக சாரல்மழை மட்டுமே பெய்கிறது.சோலையாறு அணை நேற்று காலை, 160.30 அடியாக

வால்பாறை:வால்பாறையில், இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப் பருவமழையினால், பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின.கனமழையால், 160 உயரமுள்ள சோலையாறு அணை இந்த ஆண்டில் நான்கு முறை நிரம்பியது. இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை சில தினங்களில் விடைபெறவுள்ள நிலையில், வால்பாறையில் கடந்த இரு நாட்களாக சாரல்மழை மட்டுமே பெய்கிறது.சோலையாறு அணை நேற்று காலை, 160.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 2,145 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 2,145 கனஅடி வீதம் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 71.50 அடியாக உயர்ந்தது.அதிகபட்சமாக மேல்நீராறில், 17 மி.மீ., மழை பெய்தது. சாரல் மழையால், வால்பாறையில் மக்கள் குடை பிடித்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X