பொது செய்தி

தமிழ்நாடு

பசுமையை பராமரிக்க உறுதிமொழி: கிராமத்தில் மரக்கன்றுகள் நடவு

Added : அக் 15, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை அருகே, கிராமத்திலுள்ள கோவில் நிலங்களில், மரக்கன்றுகளை நடவு செய்து, பசுமையாக்கும் பணியில் ஊராட்சி நிர்வாகம் களம் இறங்கியுள்ளது.உடுமலை அருகே, குடிமங்கலம் ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சி பகுதிகளில், கோவில் நிலங்கள், ரோடுகள், வீதிகள் மற்றும் குளம், குட்டைகளின் கரைகளில், 'வனத்துக்குள் திருப்பூர்-7' திட்டத்தின் கீழ், ஊராட்சி நிர்வாகம் சார்பில்

உடுமலை:உடுமலை அருகே, கிராமத்திலுள்ள கோவில் நிலங்களில், மரக்கன்றுகளை நடவு செய்து, பசுமையாக்கும் பணியில் ஊராட்சி நிர்வாகம் களம் இறங்கியுள்ளது.உடுமலை அருகே, குடிமங்கலம் ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சி பகுதிகளில், கோவில் நிலங்கள், ரோடுகள், வீதிகள் மற்றும் குளம், குட்டைகளின் கரைகளில், 'வனத்துக்குள் திருப்பூர்-7' திட்டத்தின் கீழ், ஊராட்சி நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியுள்ளது. நேற்று, கோவில் நிலம் மற்றும் ஊராட்சிக்கு சொந்தமான நிலங்களில், மஞ்சள் கொன்றை, தான்றி, புங்கன், பூவரசு, நாவல், வெப்பாலை, நீர் மருது, வண்டி வாகை, வேம்பு, கடுக்காய், இலவம் பஞ்சு என பல்வேறு வகையான, 500 மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், புதுப்பாளையம் ஊராட்சி தலைவர் பெரியசாமி, ஒன்றிய அலுவலக ஓவர்சீயர் சீதாலட்சுமி, துணை தலைவர் ரங்கநாதன் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். கிராம மக்கள் முறையாக பராமரித்து, மரமாக மாற்ற உறுதி ஏற்றுக்கொண்டனர்.
வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், தொழிற்சாலை வளாகங்கள், கோவில் நிலங்கள், ஊராட்சிக்கு சொந்தமான நிலங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த, 4 மாதங்களில், உடுமலை பகுதிகளில், 51 ஆயிரத்து, 609 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, நில உரிமையாளர்களால் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மரக்கன்று நடவு செய்து பராமரிக்க விருப்பம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X