பொது செய்தி

தமிழ்நாடு

மாணவ - மாணவியருக்கு இலவச சிலம்பப் பயிற்சி உத்திரமேரூரில் பாரம்பரிய கலையை காக்கும் இளைஞர்கள்

Added : அக் 15, 2021
Share
Advertisement
உத்திரமேரூர்:உத்திரமேரூரில் பட்டதாரி இளைஞர்கள் மூவர், ஐந்து ஆண்டுகளாக பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு இலவசமாக சிலம்ப பயிற்சி அளித்து வருகின்றனர்.தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க தற்காப்பு கலைகளில் ஒன்றாக சிலம்பம் உள்ளது. தமிழர்களின் வீரக்கலையான சிலம்பத்தை உலகறியச் செய்யும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் 'கேலோ
 மாணவ - மாணவியருக்கு இலவச சிலம்பப் பயிற்சி உத்திரமேரூரில் பாரம்பரிய கலையை காக்கும் இளைஞர்கள்

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் பட்டதாரி இளைஞர்கள் மூவர், ஐந்து ஆண்டுகளாக பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு இலவசமாக சிலம்ப பயிற்சி அளித்து வருகின்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க தற்காப்பு கலைகளில் ஒன்றாக சிலம்பம் உள்ளது. தமிழர்களின் வீரக்கலையான சிலம்பத்தை உலகறியச் செய்யும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் 'கேலோ இந்தியா' திட்டத்தின் கீழ் சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளது.

பாரம்பரியமிக்க இக்கலை அழியாமல் இருக்க உத்திரமேரூரை சேர்ந்த, பட்டதாரி இளைஞர்களான பிரபா, 25, ஆனந்த், 25, சஜீத், 27, ஆகிய மூவரும் ஒன்றிணைந்து, 'ஜி.எம். மருது இருவர் சிலம்ப கலைக்கூடம்' என்ற பெயரில், பள்ளி கல்லுாரி மாணவ - மாணவியருக்கு இலவசமாக சிலம்ப பயிற்சி அளித்து வருகின்றனர்.

சிலம்ப கலைக்கூடத்தின் நிர்வாக சிலம்பம் ஆசிரியர்கள் பிரபா, ஆனந்த், சஜீத் ஆகியோர் கூறியதாவது:நாங்கள் மூவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறோம். உத்திரமேரூரை சேர்ந்த சிலம்ப பயிற்சி ஆசிரியர்கள் கணேசன், முரளி ஆகியோரிடம் சிலம்ப கலையை இலவசமாக கற்றுக்ெகாண்டோம். நம் முன்னோர்களின் பாரம்பரியமிக்க இக்கலை அழியக்கூடாது. தற்போதுள்ள சூழலில், சமூகத்தில் தனியாக செல்லும் ஆண், பெண் இருவருக்கும் தற்காப்பு என்பது மிகவும் அவசியமானதாக உள்ளது.

எனவே, நாம் கற்றுக்கொண்ட சிலம்ப கலையை பிறருக்கு இலவசமாக சொல்லித்தர முடிவு செய்தோம்.அதன்படி, ஐந்து ஆண்டுகளுக்கு முன், உத்திரமேரூரில் ஜி.எம். மருது இருவர் சிலம்ப கலைக்கூடத்தை துவக்கி, இலவசமாக சிலம்ப பயிற்சி அளித்து வருகிறோம்.ஆர்வமுள்ள, 7 வயதுக்கு மேற்பட்ட பள்ளி செல்லும் சிறுவர் - சிறுமியர் மட்டுமின்றி வயது உச்சவரம்பின்றி ஆர்வமுள்ள ஆண், பெண் என இருபாலரும் எந்தவித கட்டணமும் இன்றி இலவச பயிற்சியில் சேரலாம்.எங்களிடம், 150 மாணவ - மாணவியர் பயிற்சி பெறுகின்றனர். காலை, 6:00 மணி முதல், 9:00 மணி வரையிலும், மாலை, 4:30 மணி முதல், இரவு, 7:00 மணி வரை பயிற்சி அளிக்கிறோம்.

சிலம்ப பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு, எங்களது நண்பர்கள் 'ஸ்பான்சர்' செய்கின்றனர்.உத்திரமேரூர் அய்யனார்குட்டை, ஊராட்சி ஒன்றிய முன்மாதிரி நடுநிலைப் பள்ளி விளையாட்டு மைதானம், ஏ.பி., சத்திரம் மற்றும் ஒழுகரை கிராமம் என, மூன்று இடங்களிலும் இலவசமாக சிலம்ப பயிற்சி அளித்து வருகிறோம். சிலம்பம் கற்பதன் மூலம், மாணவர்கள் தங்களது மனதை ஒருநிலைப்படுத்துவதோடு மட்டுமின்றி, அவர்களுக்கு தன்னம்பிக்கையும் ஏற்படும். மேலும் விபரங்களுக்கு, 93607 01120 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X