பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுத பூஜை கொண்டாட்டம்: தொற்று அச்சம் நீங்கி உற்சாகம்

Added : அக் 15, 2021
Share
Advertisement
உடுமலை:தொழில் வளம் சிறக்க, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில், சிறப்பு வழிபாடு செய்து, ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், நுாற்பாலைகள், பின்னலாடை நிறுவனங்கள், தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள் உட்பட பல்வேறு, சிறு, குறு தொழிற்சாலைகள் உள்ளன.தொழில் வளம் பெருகவும், உற்பத்திக்கு உதவும் ஆயுதங்களுக்கு நன்றி செலுத்தி வணங்கும் விழாவான, ஆயுத பூஜை தினம்

உடுமலை:தொழில் வளம் சிறக்க, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில், சிறப்பு வழிபாடு செய்து, ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், நுாற்பாலைகள், பின்னலாடை நிறுவனங்கள், தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள் உட்பட பல்வேறு, சிறு, குறு தொழிற்சாலைகள் உள்ளன.தொழில் வளம் பெருகவும், உற்பத்திக்கு உதவும் ஆயுதங்களுக்கு நன்றி செலுத்தி வணங்கும் விழாவான, ஆயுத பூஜை தினம் நேற்று உடுமலை பகுதிகளில், சிறப்பாக கொண்டாடப்பட்டது.கடந்த இரு ஆண்டுகளாக, கொரோனா தொற்று பரவல், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், சிறப்பாக இல்லாத நிலையில், நேற்று, ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் களைகட்டியது.நேற்று முன்தினம், வாழைக்கன்று, பொரி, கடலை, இனிப்பு, பூக்கள் மற்றும் அலங்கார பொருட்கள் கொள்முதல் செய்ய, ஏராளமான பொதுமக்கள் வந்ததால், உடுமலை நகரிலுள்ள கடை வீதிகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.நேற்று காலை, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில், சுவாமிகளுக்கும், இயந்திரங்களுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. தொழிற்சாலைகளில், வாழை, மாவிலை தோரணம் கட்டியும், வண்ண கோலமிட்டும், இயந்திரங்கள், உபகரணங்கள் துாய்மைப்படுத்தி, பல வகை பூக்களால், அலங்கரித்து, பொரி, பழங்களை வைத்து வழிபாடு செய்தனர். மேலும், இருசக்கர, நான்கு சக்கர மற்றும் சரக்கு வாகனங்களுக்கும் வழிபாடு நடத்தப்பட்டது.சில தொழிற்சாலைகளில், தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், போட்டிகள் நடத்தி, பரிசுகளை வழங்கினர். அதே போல், வீடுகளிலும், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. இன்றும், தொழிற்சாலைகள், வீடுகளில், விஜயதசமி கொண்டாடப்படுகிறது.குழந்தைகளின் பாடப்புத்தகங்கள் உட்பட புத்தகங்களை அடுக்கி வைத்து, சுண்டல், சர்க்கரை பொங்கல், அவல், பொரி, கடலை வைத்து, சரஸ்வதி தேவிக்கான பாடல்களை பாடி வழிபாடு நடக்கிறது.கல்வி நிறுவனங்களிலும், நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதே போல், நவராத்திரி ஒன்பதாம் நாளான நேற்று, அம்பிகையை பரமேஸ்வரியாக அலங்கரித்து, பூஜைகள் நடந்தது. ஆயுத பூஜையை முன்னிட்டு, உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X