வருவாய் கோட்டத்தில் 17 பேருக்கு கொரோனா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய் கோட்டத்தில் 17 பேருக்கு கொரோனா

Added : அக் 15, 2021
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, ஒரு மாணவி உட்பட, 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட வெங்காடாசலபுரம், அண்ணா அவென்யூ, திருநீலகண்டர் வீதி பகுதிகளில் மூன்று பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. அதில் ஒருவர், 9ம் வகுப்பு படிக்கும் மாணவி.வடக்கு வட்டாரம், ஜமீன் முத்துாரில் நான்கு பேர், குள்ளிச்செட்டிபாளையத்தில் ஒருவர்;

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, ஒரு மாணவி உட்பட, 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட வெங்காடாசலபுரம், அண்ணா அவென்யூ, திருநீலகண்டர் வீதி பகுதிகளில் மூன்று பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. அதில் ஒருவர், 9ம் வகுப்பு படிக்கும் மாணவி.வடக்கு வட்டாரம், ஜமீன் முத்துாரில் நான்கு பேர், குள்ளிச்செட்டிபாளையத்தில் ஒருவர்; தெற்கு வட்டாரம் சின்னாம்பாளையம், ஜமீன் ஊத்துக்குளியில் தலா ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தாலுகாவில், நேற்று, 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு தாலுகாவில், கோவில்பாளையம் கிராமத்தில் மூவருக்கும், வடபுதுார் மற்றும் சொலவம்பாளையம் கிராமங்களில் தலா இருவர், என, மொத்தம் ஏழு பேருக்கு, நேற்று தொற்று பரவல் உறுதியானது. இந்த கிராமங்களை சேர்ந்த, 182 பேரின் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனைமலை, வால்பாறை தாலுகாவில் நேற்று யாருக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகவில்லை.வருவாய் கோட்டத்தில், நேற்று, 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொற்று பாதித்தோரின் குடும்பத்தினரை தனிமைப்படுத்தி, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X