பொது செய்தி

தமிழ்நாடு

கடற்கரை - செங்கை - திருமால்பூர் கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை

Added : அக் 15, 2021
Share
Advertisement
கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூருக்கு, கூடுதலாக விரைவு புறநகர் மின்சார ரயில்கள் இயக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.கொரோனா ஊரடங்குக்கு முன், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நிலையத்துக்கு, காலை, 7:25 மணியில் இருந்து, 8:45 மணிக்குள், நான்கு விரைவு புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.இதில், ஒரு ரயில் திருமால்பூரில் இருந்து செங்கல்பட்டு வழியாக கடற்கரை

கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூருக்கு, கூடுதலாக விரைவு புறநகர் மின்சார ரயில்கள் இயக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
கொரோனா ஊரடங்குக்கு முன், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நிலையத்துக்கு, காலை, 7:25 மணியில் இருந்து, 8:45 மணிக்குள், நான்கு விரைவு புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.இதில், ஒரு ரயில் திருமால்பூரில் இருந்து செங்கல்பட்டு வழியாக கடற்கரை நிலையத்துக்கு இயக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின், திருமால்பூரில் இருந்து ஒரு ரயில், செங்கல்பட்டில் இருந்து ஒரு ரயில் என, இரண்டு விரைவு மின்சார ரயில்கள் கடற்கரை நிலையத்துக்கு இயக்கப்படுகின்றன.கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களில், பயணியர் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும்.

அதேநேரம், தாம்பரம், கிண்டி, மாம்பலம், எழும்பூர், பூங்கா, கோட்டை, கடற்கரை நிலையத்தில் மட்டும் நின்று செல்லும் விரைவு புறநகர் மின்சார ரயில்களில், தாம்பரம் - கடற்கரை நிலையம் இடையே, நெருக்கடி ஓரளவு குறைவாக இருக்கும்.இதனால், செங்கல்பட்டில் இருந்து காலை வேளையில், மேலும் இரண்டு விரைவு புறநகர் மின்சார ரயில்கள், சென்னை கடற்கரை நிலையத்துக்கு இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல், கடற்கரை நிலையத்தில் இருந்து திருமால்பூருக்கு இரவு 8:20 மணிக்கு இயக்க வேண்டிய விரைவு மின்சார ரயில், சாதாரண ரயிலாக அனைத்து நிலையங்களிலும் நின்று செல்வதால், பயணியர் நெருக்கடி அதிகம் உள்ளது.நெருக்கடியை தவிர்க்க, கடற்கரை நிலையத்தில் இருந்து இரவு, 8:15 மற்றும் 8:30 மணிக்கு செங்கல்பட்டு மற்றும் திருமால்பூருக்கு விரைவு மின்சார ரயில் இயக்கினால், பயணியருக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என, பயணியர் சார்பில் ரயில்வேக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X