சொத்து வரி செலுத்தியோருக்கு ரூ.5.94 கோடி ஊக்கத்தொகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சொத்து வரி செலுத்தியோருக்கு ரூ.5.94 கோடி ஊக்கத்தொகை

Added : அக் 15, 2021
Share
சென்னை:அக்., 1ம் தேதி முதல் 10ம் தேதிக்குள், சொத்து வரி செலுத்திய உரிமையாளர்களுக்கு, 5 சதவீதம் ஊக்கத்தொகையாக, 5.94 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நாளைக்குள் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை பெறலாம்.இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சி, ஒவ்வொரு அரையாண்டின் முதல், 15 தினங்களுக்குள் சொத்துவரி செலுத்துவோருக்கு, ஊக்கத்தொகையாக,

சென்னை:அக்., 1ம் தேதி முதல் 10ம் தேதிக்குள், சொத்து வரி செலுத்திய உரிமையாளர்களுக்கு, 5 சதவீதம் ஊக்கத்தொகையாக, 5.94 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நாளைக்குள் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை பெறலாம்.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சி, ஒவ்வொரு அரையாண்டின் முதல், 15 தினங்களுக்குள் சொத்துவரி செலுத்துவோருக்கு, ஊக்கத்தொகையாக, சொத்து வரியில், 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக, 5,000 ரூபாய் வழங்குகிறது.

அதன்படி, நடப்பு அரையாண்டு துவங்குவதற்கு முன்பாகவே, 4.01 லட்சம் சொத்து உரிமை யாளர்களும், அரையாண்டு காலம் துவங்கியப்பின், 1.37 லட்சம் சொத்து உரிமையாளர்களும், தங்களது சொத்து வரியினை செலுத்தியுள்ளனர்.அதன்படி, இந்த அரையாண்டில் சொத்துவரி செலுத்தியோருக்கு, 5.94 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

அதன் படி, நாளைக்குள் சொத்து வரி செலுத்துவோரும், ஊக்கத்தொகை பெற தகுதி உடையவர். அதன் பின் வரி செலுத்துவோர், சொத்து வரிக்கு, 2 சதவீதம் தனி வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X