சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உணவகங்களில் தக்காளி சட்னி 'கட்'

Added : அக் 15, 2021
Share
Advertisement
திருவொற்றியூர்:தக்காளி விலை நாளுக்கு நாள், உயர்ந்து வருவதால் உணவகங்களில், தக்காளி சட்னி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.சென்னை முழுவதும், தக்காளியின் விலை உயர்ந்து வருகிறது. திருவொற்றியூர், மணலி சுற்றுவட்டாரத்தில், 1 கிலோ தக்காளி, 60 முதல் 75 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. வழக்கமாக உணவகங்களில் இட்லி, தோசை உள்ளிட்ட சிற்றுண்டிகளுக்கு, தக்காளி சட்னி வழங்கி வந்த

திருவொற்றியூர்:தக்காளி விலை நாளுக்கு நாள், உயர்ந்து வருவதால் உணவகங்களில், தக்காளி சட்னி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும், தக்காளியின் விலை உயர்ந்து வருகிறது. திருவொற்றியூர், மணலி சுற்றுவட்டாரத்தில், 1 கிலோ தக்காளி, 60 முதல் 75 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. வழக்கமாக உணவகங்களில் இட்லி, தோசை உள்ளிட்ட சிற்றுண்டிகளுக்கு, தக்காளி சட்னி வழங்கி வந்த நிலையில், விலை உயர்வால், நிறுத்தப்பட்டுள்ளது.

மாற்றாக, புதினா மற்றும் தேங்காய் சட்னி வழங்கி வருகின்றனர். தீபாவளி முடியும் வரை, விலை உயர்வு இருக்கும் என கணிக்கும் சிறு உணவக உரிமையாளர்கள், அதுவரை தக்காளி மற்றும் கார சட்னி வழங்க முடியாது என்றனர்.தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்திருப்பதால், பல வீடுகளில் தக்காளி சிக்கனமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக, காய்கறி வியாபாரிகளும் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X