ஆன்லைன் முறையில் 80 கேள்விகளுக்கு உடனடி தீர்வு: சி.எம்.டி.ஏ., அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' முறையில் 80 கேள்விகளுக்கு உடனடி தீர்வு: சி.எம்.டி.ஏ., அசத்தல்

Added : அக் 15, 2021
Share
சென்னை:'ஆன்லைன்' முறையில் பொது மக்கள் மேற்கொள்ளும் விசாரிப்புகளில், 80 சதவீத கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிக்கப்பட்டுள்ளதாக சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், பொது மக்கள் என்ற பெயரில் தரகர்கள் நடமாட்டம் வெகுவாக அதிகரித்தது.இதனால், லஞ்சம் கொடுத்து கவனித்தால் மட்டுமே கோப்புகள் நகரும் நிலை இருந்தது.இந்நிலையில்,

சென்னை:'ஆன்லைன்' முறையில் பொது மக்கள் மேற்கொள்ளும் விசாரிப்புகளில், 80 சதவீத கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிக்கப்பட்டுள்ளதாக சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், பொது மக்கள் என்ற பெயரில் தரகர்கள் நடமாட்டம் வெகுவாக அதிகரித்தது.இதனால், லஞ்சம் கொடுத்து கவனித்தால் மட்டுமே கோப்புகள் நகரும் நிலை இருந்தது.

இந்நிலையில், புதிதாக பொறுப்புக்கு வந்த உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, லஞ்ச அதிகாரிகளை இடமாற்றம் செய்ததுடன், பொது மக்கள் நேரடியாக வருவதற்கு தடை விதித்தார்.கட்டட அனுமதி, நில வகைபாடு மாற்றம் தொடர்பான பணிகளுக்கு, பொது மக்கள் நேரில் வருவதற்கு பதில், ஆன்லைன் முறையில் விசாரிப்புகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.தொலைபேசி, 'வாட்ஸ் ஆப், இ - மெயில், வீடியோ கான்பரன்சிங்' முறையில் பொது மக்கள் விசாரிப்புகளை மேற்கொள்ள வழி ஏற்பட்டது.

இது குறித்து சி.எம்.டி.ஏ., உயரதிகாரிகள் கூறியதாவது:ஆன்லைன் முறையில் பொது மக்கள், செப்., 15 முதல் விசாரிப்புகள் மேற்கொள்கின்றனர். இதுவரை, 134 பேர் இந்த வசதியை பயன்படுத்தினர்.இதில், 80 சதவீத மக்களின் கேள்விகளுக்கு தொலைபேசி, வாட்ஸ் ஆப், இ - மெயில் வாயிலாகவே உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இவர்களில், ஒன்பது பேர் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விளக்கம் அளித்தனர்.
கட்டட வரைபடம் தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்க, 16 பேர் அனுமதி கேட்டனர். கேமரா முன்னிலையில் இவர்கள் அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த வசதிக்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X