போலீஸ் டைரி: திருவள்ளூர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி: திருவள்ளூர்

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021
Share
மண் கடத்திய டிரைவர் கைதுதிருத்தணி: திருத்தணி அடுத்த, மேல்முருக்கம்பட்டு பகுதியில், கிராவல் மண் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருத்தணி போலீசார் மேற்கண்ட பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்த டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுனர் கார்த்திக், 26, என்பவரை கைது செய்தனர். லாரியின்

மண் கடத்திய டிரைவர் கைது

திருத்தணி: திருத்தணி அடுத்த, மேல்முருக்கம்பட்டு பகுதியில், கிராவல் மண் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருத்தணி போலீசார் மேற்கண்ட பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்த டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுனர் கார்த்திக், 26, என்பவரை கைது செய்தனர். லாரியின் உரிமையாளர் சுரேஷ் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

ரயிலில் தவறி விழுந்தவர் பலி

நகரி: சித்துார் மாவட்டம், ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் இருந்து, கடப்பாவிற்கு நேற்று முன்தினம் சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது. அந்த சரக்கு ரயில் பெட்டிக்கு இடையே உள்ள கம்பியின் இணைப்பு பாகத்தில், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உட்கார்ந்தபடி சென்றார்.ரேணிகுண்டா அடுத்த, கோடூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர், சம்பவ இடத்திலேயே இறந்தார். ரேணிகுண்டா ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த வாலிபரின் பெயர், விலாசம் தெரியவில்லை. ரேணிகுண்டா ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

நகரி: சித்துார் மாவட்டம், பிலேறு அடுத்த, காமாட்டம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரா,32. இவர், அதே பகுதியில் உள்ள கிராமங்களில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பிலேறு போலீசார் மேற்கண்ட கிராமத்தில் சோதனை நடத்திய போது, ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்த, தேவேந்திராவை கைது செய்தனர். மேலும், 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இளம்பெண் மாயம்

ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், பாலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களது மகள் ஹேமாவதி, 18. இவர், தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.இதனிடையே, கல்லுாரி விடுமுறை ஆனதால், ஒர் ஆண்டாக புதுவாயல் கிராமத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கல்லுாரி தற்போது திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்த 11ம் தேதி கல்லுாரிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தாயார் பரமேஸ்வரி, ஊத்துக்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.அதன்படி, ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குபதிந்து, ஹேமாவதியை தேடி வருகின்றனர்.

வாகனம் மோதி மூதாட்டி பலி

போளிவாக்கம்: போளிவாக்கம், சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் துரை மனைவி தயாளு அம்மாள், 52. இவர், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியின் விநாயகர் கோவில் அருகே, திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த மணவாள நகர் போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

வாலிபரை தாக்கிய இருவர் கைது

கடம்பத்துார்: ராமன் கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய், 25. இவரது மனைவி பவித்ரா, 20. இவரது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இதே பகுதியைச் சேர்ந்த ரகு என்பவர், மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியுள்ளார். இதை கணவர் விஜய் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரகு, அவரது நண்பரான விவேக் என்பவருடன் சேர்ந்து, ஆபாசமாக பேசி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இது குறித்து, பவித்ரா அளித்த புகாரையடுத்து, கடம்பத்துார் போலீசார் ரகு, விவேக் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X