பொது செய்தி

தமிழ்நாடு

சர்ப்ப வாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வந்தார்அய்யா வைகுண்ட தர்மபதி

Added : அக் 15, 2021
Share
Advertisement
மணலிபுதுநகர்:புரட்டாசி திருவிழாவின் ஆறாம் நாளில், அய்யா வைகுண்ட தர்மபதி, சர்ப்ப வாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வந்தார்.சென்னை, மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில், பிரசித்திப் பெற்றது. இங்கு, ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இவ்வாண்டு, 8 ம் தேதி அதிகாலை, அய்யா திருநாம கொடியேற்றத்துடன், புரட்டாசி திருவிழா துவங்கியது. விழா

மணலிபுதுநகர்:புரட்டாசி திருவிழாவின் ஆறாம் நாளில், அய்யா வைகுண்ட தர்மபதி, சர்ப்ப வாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வந்தார்.

சென்னை, மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில், பிரசித்திப் பெற்றது. இங்கு, ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இவ்வாண்டு, 8 ம் தேதி அதிகாலை, அய்யா திருநாம கொடியேற்றத்துடன், புரட்டாசி திருவிழா துவங்கியது. விழா நாட்களில் கருடர், காளை, அன்னம், மயில், ஆஞ்சநேயர் உள்ளிட்ட வாகனங்களில் பதிவலம் வந்தார்.

ஆறாம் நாளான நேற்று முன்தினம் மாலை, அய்யா வைகுண்ட பரம்பொருள், சர்ப்ப வாகனத்தில் எழுந்தருளினார். செண்டை மேளம், நையாண்டி மேள வாத்திய இசையும், அய்யா பல்லக்கில் ஒய்யாரமாய் பதிவலம் வந்தார். பதிவலத்தின் போது, 'அய்யா ஹரஹர சிவ சிவ' என, விண்ணதிர முழங்கினர்.

பத்து நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, திருக்கல்யாண ஏடு வாசிப்பு; சரக்கு விளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை நிகழ்வு, இன்றிரவும், அய்யா திருத்தேரோட்டம், 17ம் தேதி காலையும் நடைபெறும்.அன்றிரவு, பூம்பல்லக்கு வாகனத்தில் அய்யா பதிவலம் வருதல், பின் இரவில் கொடி அமர்தல் நிகழ்வுடன் திருவிழா நிறைவுறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X