வணிக வளாகத்தில் பூட்டை உடைத்து கைவரிசை சிக்கியவரிடம் ரூ.60.72 லட்சம் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வணிக வளாகத்தில் பூட்டை உடைத்து கைவரிசை சிக்கியவரிடம் ரூ.60.72 லட்சம் பறிமுதல்

Added : அக் 15, 2021
Share
சேத்துப்பட்டு:பிரபல வணிக வளாகத்தில் செயல்படும் தனியார் நிறுவனத்தில், பூட்டை உடைத்து 72 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்த பழைய குற்றவாளியை, போலீசார் கைது செய்தனர்.அண்ணா நகரைச் சேர்ந்தவர், ஆசிஷ் பன்சால், 45. இவர், ஆந்திர மற்றும் ஸ்ரீபெரும்புதுாரில், வாகன பேட்டரிகளுக்கு அலுமினிய உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.இதன் தலைமை நிர்வாக அலுவலகம்,

சேத்துப்பட்டு:பிரபல வணிக வளாகத்தில் செயல்படும் தனியார் நிறுவனத்தில், பூட்டை உடைத்து 72 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்த பழைய குற்றவாளியை, போலீசார் கைது செய்தனர்.

அண்ணா நகரைச் சேர்ந்தவர், ஆசிஷ் பன்சால், 45. இவர், ஆந்திர மற்றும் ஸ்ரீபெரும்புதுாரில், வாகன பேட்டரிகளுக்கு அலுமினிய உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.இதன் தலைமை நிர்வாக அலுவலகம், சேத்துப்பட்டில் உள்ள பிரபல வணிக வளாகத்தின், நான்காவது தளத்தில் செயல்படுகிறது.

வழக்கம்போல், கடந்த 11ம் தேதி இரவு அலுவலகத்தை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். பின், 12ம் தேதி காலை, ஊழியர் ஒருவர் அலுவலகத்தை திறக்க வந்தபோது, கதவு திறந்து கிடந்தது.அலுவலகத்தில் இருந்த, 72லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது.புகாரின் படி, கீழ்ப்பாக்கம் துணை மற்றும் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் தலைமையிலான ஐந்து தனிப்படை போலீசார் மர்மநபரை தேடி வந்தனர்.

கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், தி.நகரில் உள்ள தனியார் ஓட்டலில் தலைமறைவாக இருந்த, குற்றவாளியை, நேற்று அதிகாலை கைது செய்து, 60.72 லட்சம் ரூபாயை மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் திருநெல்வேலியை சேர்ந்த பாண்டுரங்கம், 57, என்பதும், நிறுவனங்களில் பூட்டை உடைத்து திருடும் பழைய குற்றவாளி எனவும் தெரிந்தது.

இவர் மீது, சென்னை மற்றும் கோவையில், 21 வழக்குகள் உள்ளன. இவர், 1989ல் திருட்டு வழக்கு ஒன்றில், மத்திய சிறையில் தண்டனை பெற்றுள்ளார்.பாண்டுரங்கம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்:குற்றம் சம்பவங்களில் ஈடுபடாமல், 20 ஆண்டுகளாக திருந்தி வாழ்ந்து வந்தேன். கடன் பிரச்னையால், மீண்டும் திருடுவதற்காக, செப்., 18ல் சென்னைக்கு வந்தேன்.கீழ்ப்பாக்கம், அண்ணா நகர், அமைந்தகரை உள்ளிட்ட இடங்களில் உள்ள தனியார் வணிக வளாகங்களை, 11 நாட்களாக நோட்டமிட்டு வந்தேன். பின், சேத்துப்பட்டு நிறுவனத்தை தேர்வு செய்து, திட்டமிட்டபடி திருடிச் சென்றேன்.இவ்வாறு அவர் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X