சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூ - வீலரில் சென்ற வாலிபருக்கு கத்திக்குத்து

Added : அக் 15, 2021
Share
Advertisement
திருத்தணி:இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் ஒருவரை, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், திடீரென கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றனர்.திருத்தணி, செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் சையத்பாஷா மகன் சித்திக், 24. பொறியியல் பட்டதாரி. இவர் நேற்று, இரு சக்கர வாகனத்தில் கமலா தியேட்டர் பகுதியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது, நேரு நகர் அருகே,

திருத்தணி:இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் ஒருவரை, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், திடீரென கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றனர்.

திருத்தணி, செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் சையத்பாஷா மகன் சித்திக், 24. பொறியியல் பட்டதாரி. இவர் நேற்று, இரு சக்கர வாகனத்தில் கமலா தியேட்டர் பகுதியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது, நேரு நகர் அருகே, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்த இரு வாலிபர்கள், திடீரென சித்திக் வாகனத்தை மடக்கி நிறுத்தி, வலது கையில் கத்தியால் குத்திவிட்டு இருவரும் தப்பி ஓடினர்.

இதில் பலத்த காயம் அடைந்த சித்திக், திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெறுகிறார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X