சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'அன்பாக' பேசி 110 சவரன் சுருட்டிய பெண் கைது

Added : அக் 15, 2021
Share
Advertisement
கிண்டி:அக்கம் பக்கத்தில் வசிப்போரிடம் பேசிப் பழகி, 110 சவரன் நகை மற்றும் 18 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.கிண்டி, இளங்கோ தெருவைச் சேர்ந்தவர் சுகந்தி, 30. இவர், அக்கம் பக்கத்திலிருந்த வீடுகளுக்குச் சென்று மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர்களின் வீட்டில் ஒருவரைப் போல் பேசிப் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில், விசேஷ

கிண்டி:அக்கம் பக்கத்தில் வசிப்போரிடம் பேசிப் பழகி, 110 சவரன் நகை மற்றும் 18 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.

கிண்டி, இளங்கோ தெருவைச் சேர்ந்தவர் சுகந்தி, 30. இவர், அக்கம் பக்கத்திலிருந்த வீடுகளுக்குச் சென்று மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர்களின் வீட்டில் ஒருவரைப் போல் பேசிப் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில், விசேஷ வீடுகளுக்குச் செல்ல, தங்கை திருமணம், உறவினர் குழந்தைக்கு பெரிய அறுவை சிகிச்சை என, விதவிதமாக பொய் கூறி, ஒவ்வொரு வீடுகளில் இருந்தும், 5 முதல் 10 சவரன் நகையை வாங்கி உள்ளார்.

கணவருக்கு தெரியாமலும், ஒரு வீட்டில் நகை வாங்கியது அடுத்த வீட்டுக்கு தெரியாமலும், ஒவ்வொருவரையும் பேச்சில் மயக்கி ஏமாற்றி உள்ளார்.இந்த வகையில், 15க்கும் மேற்பட்டோரிடம் இருந்து, 110 சவரன் நகையை வாங்கி, அதை வேளச்சேரியில் உள்ள ஒரு அடகு கடையில் வைத்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி உள்ளார்.

மேலும் ஏலச் சீட்டு, வட்டிக்கு கடன் என, 10க்கும் மேற்பட்டோரிடம் இருந்து, 18 லட்சம் ரூபாய் வரை வாங்கி ஏமாற்றி உள்ளார். நகை, பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், நான்கு மாதங்களுக்கு முன், கிண்டி போலீசில் புகார் அளித்தனர்.இந்நிலையில், தலைமறைவாக இருந்த சுகந்தியை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X