பொது செய்தி

தமிழ்நாடு

'மலபார் கோல்டு' நிறுவன துாதுவரானார் நடிகர் கார்த்தி

Added : அக் 15, 2021
Share
Advertisement
சென்னை:'மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ்' நிறுவனத்தின், 'பிராண்ட் அம்பாசிடராக' நடிகர் கார்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.தங்கம் விற்பனையில், மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்திற்கு, 10 நாடுகளில், 260க்கும் மேற்பட்ட 'ஷோ ரூம்'கள் உள்ளன. தமிழகத்தின் தனித்துவமான கலாசாரத்தை கொண்டாடும் வகையில், நடிகர் கார்த்தி இந்நிறுவனத்தின்

சென்னை:'மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ்' நிறுவனத்தின், 'பிராண்ட் அம்பாசிடராக' நடிகர் கார்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தங்கம் விற்பனையில், மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்திற்கு, 10 நாடுகளில், 260க்கும் மேற்பட்ட 'ஷோ ரூம்'கள் உள்ளன. தமிழகத்தின் தனித்துவமான கலாசாரத்தை கொண்டாடும் வகையில், நடிகர் கார்த்தி இந்நிறுவனத்தின் துாதராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மலபார் குழும தலைவர் எம்.பி.அகமது கூறுகையில், ''இந்தியா பன்முக தன்மை கொண்ட நாடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிப்பட்ட கலாசாரம் உள்ளது.''நம் தனித்துவமான கலாசாரத்தை வெளிப்படுத்த, நடிகர் கார்த்தியை துாதுவராக ஏற்படுத்தியுள்ளோம். தமிழக மக்களுடனான உறவை மேம்படுத்த இவரை விட சிறந்த தேர்வு இருக்காது,'' என்றார்.

நடிகர் கார்த்தி கூறுகையில், ''பல நாடுகளில் வலுவான முன்னணியில் உள்ள நிறுவனத்துடன் இணைவதில் மகிழ்ச்சி. அதேபோல், நிறுவனத்தின் நகைகளுக்கு வாழ்நாள் முழுதும் இலவச பராமரிப்பு மற்றும் நியாயமான விலைக்கான உத்தரவாதங்களை கண்டு ஆச்சரியமாக உள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X