சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆபத்தை உணராமல் வெங்கச்சேரி செய்யாற்றில் சிறுவர்கள், இளைஞர்கள் விபரீத விளையாட்டு

Added : அக் 15, 2021
Share
Advertisement
உத்திரமேரூர்:ஆபத்தை உணராமல், வெங்கச்சேரி செய்யாற்றின் நடுவில், வெள்ள நீரில் சிறுவர்கள், இளைஞர்கள் விபரீத விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உருவாகும் செய்யாறு, உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் வழியாக, காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் நுழைந்து, அனுமந்தண்டலம், வெங்கச்சேரி, இளையனார்வேலுார், வயலக்காவூர் வழியாக, திருமுக்கூடல்

உத்திரமேரூர்:ஆபத்தை உணராமல், வெங்கச்சேரி செய்யாற்றின் நடுவில், வெள்ள நீரில் சிறுவர்கள், இளைஞர்கள் விபரீத விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உருவாகும் செய்யாறு, உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் வழியாக, காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் நுழைந்து, அனுமந்தண்டலம், வெங்கச்சேரி, இளையனார்வேலுார், வயலக்காவூர் வழியாக, திருமுக்கூடல் பகுதியில், பாலாறு மற்றும் வேகவதி ஆற்றுடன் கலக்கிறது.

இரு வாரத்திற்கு முன், திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான, பெருநகர் செய்யாற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.இதனால், அனுமந்தண்டலம் தடுப்பணையில் இருந்து, உத்திரமேரூர் ஏரிக்கு வெள்ள நீர் திருப்பி விடப்பட்டுள்ளது.இருப்பினும், நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தடுப்பணை நிரம்பி, உபரி நீரால் வெங்கச்சேரி தடுப்பணையும் நிரம்பி, ஆதவபாக்கம் செய்யாற்றின் கரையோரமாக வெள்ள நீர் திருமுக்கூடல் நோக்கி செல்கிறது.

ஆற்றில் வெள்ள நீர் செல்வதை வேடிக்கை பார்க்க பல கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள், ஆபத்தை உணராமல்ஆற்றின் நடுவில் இறங்கி ஹாயாக நடந்தபடியே தண்ணீரில் விளையாடி வருகின்றனர்.இதில், ஆற்றில் மணல் திருட்டு நடந்த இடத்தில் பள்ளத்தில் நீர் நிரம்பி இருப்பதால், நீச்சல் தெரியாத சிறுவர்கள்பள்ளத்தில் தவறி விழுந்து மூழ்கும் அபாயம் உள்ளது.

மேலும், திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தாலும், ஆற்றில் இறங்கி விளையாடும் சிறுவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்படும் அபாயமும் உள்ளது.எனவே, ஆற்றில் இறங்கி சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் குளிக்க போலீசார் தடை விதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X